எம்ஜிஆர் வாழ்க்கை வரலாறு
எம்ஜிஆர் வாழ்க்கை வரலாறு: எம்ஜிஆர் என்ற மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் இவர் வருமானம் இல்லாத ஏழை குடும்பத்தில் பிறந்து பின்னர் தம் அயராது உழைப்பாலும் முயற்சியின்மையாலும் பல்வேறு நிலைகளுக்கு உயர்ந்து தமிழகத்தின் முதலமைச்சராய் மூன்று முறை ஆட்சி செய்து மக்கள் தன் வாழ்நாளில் எவற்றை கடைபிடிக்க வேண்டும் எப்படி வாழ வேண்டும் என்று உலகிற்கு எடுத்துக் காட்டியவர்.
எம்ஜிஆர் பற்றிய சிறு குறிப்புகள் - Biography Of MGR In Tamil
எம் ஜி ஆர் - ன் பிறந்தநாள் - 17.01.1917
எம்ஜிஆர் - ன் முழு பெயர் - மருதூர் கோபாலன் ராமச்சந்திரன்
எம்ஜிஆர் பிறந்த ஊர் - இலங்கை, நாவலப் பெட்டி
எம்ஜிஆர் நடித்த முதல் திரைப்படம் - சதிலீலாவதி 1936
எம்ஜிஆர் பெற்றோர் பெயர் - கோபாலன் மேனன், சத்தியபாமா
எம்ஜிஆர் - ன் முதல் மனைவி பெயர் - தங்கமணி (இவர் உடல்நலக்குறைவால் 1942 ஆம் ஆண்டு இறந்துவிட்டார்)
எம்ஜிஆரின் இரண்டாவது மனைவியின் பெயர் - சதாநந்தவதி (1962 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்)
எம்ஜிஆரின் மூன்றாவது மனைவியின் பெயர் - ஜானகி
எம்ஜிஆர் மக்களுக்கு செய்த நலத்திட்டங்கள் - இலவச சத்துணவு மற்றும் சீருடை திட்டம், இலவச மின்சார திட்டம், புலவர்களின் கடன் தள்ளுபடி திட்டம் மற்றும் பல வகையான திட்டங்களை வகுத்தும் அதனை செயல்படுத்தியும் காட்டினார்.
எம்ஜிஆர் பெற்ற விருதுகள் - ரிக்ஷாக்காரன் திரைப்படத்திற்காக தேசிய விருது கிடைத்தது, சென்னை மற்றும் உலக பல்கலைக்கழகம் முனைவர் என்ற பட்டத்தை சூட்டில் சிறப்பித்தது
எம்ஜிஆரின் இளமைப் பருவம்:
MGR Life History In Tamil - எம்ஜிஆர் தம் இரண்டாம் வயதில் தந்தையை இழந்தார். எனவே தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில் அவர் குடும்பம் குடியேறியது. அவர் ஆணையடி பள்ளியில். குடும்பத்தின் வறுமை காரணமாக சிறுவயதில் நாடகத் துறையில் ஈடுபட்டார்.
எம்ஜிஆரின் தொடக்க கால அரசியல்:
எம்ஜிஆர் வாழ்க்கை வரலாறு: எம்ஜிஆர் தொடக்க காலத்தில் காந்தியடிகளிடம் பற்று கொண்டார். கதர் அணிந்தார். காங்கிரஸ் இயக்கத்தின் கொள்கையை பிரச்சாரம் செய்தார். பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். அந்தக் கட்சியின் பொருளாளராய் உயர்ந்தார்.
மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் எம்ஜிஆர் காட்டிய வழிகள்:
கொடியில் பூத்த மலர் எங்கும் மனம் வீசும். அதுபோல பத்து மாசம் சுமந்து பெற்ற அன்னை பெருமைப்படவும், மற்றவராலே போற்றப்படவும் மனிதன் வாழ வேண்டும். என மனிதன் வாழ வேண்டிய முறையை எம்ஜிஆர் ஒரு படத்தில் உணர்த்தியுள்ளார்.
வேடிக்கையாய் கூட நம்பி பயந்து விடக்கூடாது - எம்ஜிஆரின் வசனம்:
சிறுவர்கள் விளையாடப் போகும்போது, அங்குள்ள வேப்ப மரத்தில் பேய் ஒன்று ஆடுகிறது என்று தேவையற்ற வீனர்கள் கூறுவார்கள். சிறுவர்களின் வீரத்தை முளையிலேயே கிள்ளி வைப்பார்கள். அவர்களின் வார்த்தையை வேடிக்கையை கூட நம்பி விடக்கூடாது என பாடலில் கூறப்பட்டுள்ளார்.
சோம்பலை நீக்கி எவ்வாறு வாழ வேண்டும்:
எம்ஜிஆர் வாழ்க்கை வரலாறு: கிடைத்த நல்ல பொழுதை பயன்படுத்தி தாமும் வாழ்ந்து நாடும் நலம் பெற செய்ய வேண்டும். அதிர்ஷ்டத்தை நம்பாமல் இரவும் பகலும் உழைத்து பயன்பெற வேண்டும். இவ்வாறு சோம்பலை நீக்கி வாழ வேண்டும் என எம்ஜிஆர் தெளிவுபடுத்தியுள்ளார்.
எம்ஜிஆர் பெற்ற பட்டங்கள்:
எம்ஜிஆர் சென்னை பல்கலைக்கழகத்திடமிருந்து “டாக்டர்“ பட்டத்தையும் இந்திய அரசிடம் இருந்து சிறந்த நடிகருக்கான “பாரத்“ பட்டத்தையும் பெற்றார். மேலும் அவர் “மக்கள் திலகம்“, “புரட்சித் தலைவர்“ எனும் பட்டத்தையும் பெற்றார்.
குழந்தைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும் எம்ஜிஆரின் அறிவுரைகள்:
MGR Life History In Tamil - குழந்தைகள் எதிர்கால செல்வங்கள். அவர்கள் அச்சம் தவிர்த்து வீர உணர்வை இளமையிலேயே பெற வேண்டும். வீணர்களின் பயனற்ற வார்த்தைகளை நம்பக்கூடாது. குழந்தைகள் தம் அன்னை தந்தை நல்ல வழிகாட்டும் தலைவர் முதலானவரின் துணைகொண்டு சோம்பல் என்று செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் நல்ல எதிர்காலம் உருவாகும். இவ்வாறு எம்ஜிஆர் குழந்தைகள் வளர வேண்டிய முறையை தம் நடிப்பின் மூலம் உணரச் செய்துள்ளார்.
எம்ஜிஆரின் திரை உலக வாழ்வு:
எம்ஜிஆர் வாழ்க்கை வரலாறு: திரை உலகில் சுமார் 25 ஆண்டுகள் முடிசூடா மன்னனாய் விளங்கினார். எம்ஜிஆர். தாம் ஏற்ற பாத்திரங்களின் மூலம் சோம்பித்திரியக் கூடாது, உழைப்பே முக்கியமானது, பிறரிடம் கையேந்த கூடாது, உழைப்பு உயர்த்தும் என்னும் கருத்துக்களை மக்கள் மனதில் புரியச் செய்தார்.
எதிர்கால செல்வங்களான குழந்தைகள் எப்படி வளர வேண்டும் என்பதை பாடி நடித்து அவர்கள் உள்ளங்களில் நம்பிக்கை ஏற்படுத்தினார்.
எம்ஜிஆரின் அரசியல் வாழ்வு:
- மக்கள் திலகம் 1963ஆம் ஆண்டு சென்னை மாநில சட்டமன்ற மேல் சபை உறுப்பினரானார்.
- 1967 ஆம் ஆண்டில் பரங்கிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
- 1972 ஆம் ஆண்டு புதிய கட்சி ஒன்றை தொடங்கினார்.
- 1977, 1980, 1984 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சர் ஆனார்.
- ஏழை எளிய மக்களின் வாழ்வை உயர்த்த அரும்பாடு பட்டு உழைத்தார்.
எம்ஜிஆரின் மக்களுக்காக கொண்டு வந்த நலத்திட்டங்கள்:
பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தை விரிவு படுத்தினார். அவர்களுக்கு இலவச உடை, புத்தகம், காலனி முதலியன வழங்கச் செய்தார். தன்னிறைவு திட்டம், உலவர்களின் கடன் தள்ளுபடி, வீட்டு வசதி திட்டம், ஆதரவற்ற மகளிர்க்கு உதவும் திட்டம் என பல திட்டங்களை தீட்டி அதனை செயல்படுத்தியும் காட்டினார்.
எம்ஜிஆரை தமிழக அரசு எவ்வாறு பெருமைப்படுத்தியுள்ளது:
எம்ஜிஆர் வாழ்க்கை வரலாறு: திரைப்படத்துறையின் ஒரு பிரிவில் சிறந்து விளங்குவோருக்கு எம்ஜிஆர் பெயரில் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் விருது வழங்குகிறது. கலை நுட்பத்துடன் கூடிய நினைவிடம் ஒன்றை அவருக்கு சென்னை கடற்கரையில் அமைத்து பாதுகாக்கிறது.
மேலும் அவர் நினைவு போற்றும் வகையில் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தையும் நிறுவி அவர் நினைவை அரசு போற்றுகிறது. இந்திய அரசின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை மைய அரசு அவர் மறைவுக்குப் பின் வழங்கியது.
தமிழகத்தின் மிகப்பெரிய ரயில்வே நிலையமாக சென்னையில் உள்ள ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் ரயில் நிலையம் என்ற பெயர் சூட்டி அவரை பெருமை படுத்தி உள்ளது.
இவ்வாறு தமிழக அரசும் ஒன்றிய அரசும் எம்ஜிஆரை பெருமை படுத்தி உள்ளனர்.
எம்ஜிஆரின் இறப்பு:
எம்ஜிஆர் வாழ்க்கை வரலாறு: எம்ஜிஆர் அவர்கள் 1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி இயற்கை மரணம் அடைந்தார். அதற்கு முன்னர் வரை அவர் சிறுநீரக பிரச்சனையால் பல்வேறு நாடுகளுக்கு சென்று மருத்துவ சிகிச்சை பெற்று, கடைசியாக அமெரிக்காவிற்கு சென்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். எம்ஜிஆர் உடைய இறப்புக்கு பின்னர் இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவப்படுத்தி உள்ளது.
தற்போது சென்னையில் உள்ள அவரது வீட்டை எம்ஜிஆரின் நினைவு இல்லமாக மாற்றி தமிழ்நாடு அரசு பராமரித்து வருகின்றது. மேலும் அவர் திரைத்துறையில் இருந்த பொழுது, சத்யா ஸ்டூடியோ என்ற இடத்தை தற்போது ஒரு பெண்கள் கல்லூரி ஆக தமிழக அரசு மாற்றி உள்ளது.
எம்ஜிஆர் பற்றிய சிறிய வரலாறு:
எம்ஜிஆர் வாழ்க்கை பற்றிய முழு தகவல்கள்
- எம்ஜிஆர் அவர்கள் சதிலீலாவதி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு தோன்றினார்.
- எம்ஜிஆர் நடித்த முதல் வெற்றி படத்தின் பெயர் “ராஜகுமாரி”
- 1967 ஆம் ஆண்டு எம் ஆர் ராதாவால் எம்ஜிஆர் கழுத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
- இதுவரை மூன்று முறை முதலமைச்சர் தேர்தலில் நின்று வெற்றி கண்ட ஒரே முதல்வர்
எம்ஜிஆர் மட்டும் தான். - முதலில் திமுகவில் இருந்த எம் ஜி ஆர் பின்னர் ஒரு சொந்த கட்சி ஆரம்பித்து அதற்கு ஆயி அதிமுக என்ற பெயரையும் வைத்தார்.
- எம்ஜிஆர் நடித்த ரிக்சாக்காரன் என்ற திரைப்படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது.
- மேலும் பத்மஸ்ரீ விருது ஆங்கிலத்தில் இருந்ததால் அவ்விருதயம் ஏற்க அவர் மறுத்துவிட்டார்.
- 1978 ஆம் ஆண்டு தேர்தலில் முதல் முறையாக தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனார்
- எம்ஜிஆர் அரசியலுக்கு வர காரணமாய் இருந்தது அறிஞர் அண்ணா, அவருடைய பேச்சாற்றலில் மயங்கி தன்னுடைய திரை பயணத்தை தொடர்ந்து மக்களுக்கு பணியாற்றவும் வந்தார்.
- எம்ஜிஆர் மொத்தமாக 136 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
- எம்ஜிஆர் தன்னுடைய இரண்டாவது வயதிலேயே தன் தந்தையை இழந்தார்.
- இலங்கையில் இருந்து வந்த எம்.ஜி.ஆரின் குடும்பம் முதலில் தமிழகத்தில் உள்ள கும்பகோணத்தில் குடியேறியது.
இவ்வாறாக எம்ஜிஆர் தன் வாழ்வனைத்தும் போராடி வெற்றியை பெறுவதற்கு முயற்சி ஒன்றே சிறந்த வழி என்பதை உணர்த்திவிட்டு சென்றிருக்கிறார். எவன் ஒருவன் முயற்சி செய்யாது இருக்கிறானோ, அவனால் எக்காரணத்தையும் செய்ய முடியாது என்பதை தான் நடித்த அனைத்து திரைப்படங்களின் வாயிலாகவும் மக்களுக்கு எடுத்துரைத்தார்.
எம்ஜிஆர் அவர்களுக்கு தமிழக மக்களால் புரட்சித் தலைவர், மக்கள் திலகம், பொன்மனச் செம்மல் என்ற பல்வேறு பெயர்கள் சூட்டப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டது.
உலகிலேயே முதல் முறையாக ஒரு நடிகரும் ஒரு அரசியல், ஒரு அரசியல் தலைவராகவும் இருந்து மறைந்த ஒரே மனிதர் என்றால் அது எம்ஜிஆர் மட்டும்தான்.
எம்.ஜி.ஆர் பற்றிய குறிப்பு:
எம்ஜிஆர் பிறந்த தேதி:
எம்.ஜி.ராமச்சந்திரன் 1917-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி பிறந்தார். இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.1977 முதல் 1987-ஆம் ஆண்டு வரை தன்னுடைய இறக்கும் தருணத்தில் கூட தமிழகத்தின் முதலமைச்சராக பணியாற்றினார்.
எம்ஜிஆர் பிறந்த ஊர்:
எம்ஜிஆர் நாவலப்பிட்டி, கண்டி மாவட்டம், மத்திய மாகாணத்தில் பிரத்தியானிய சிலோன் பகுதியில் பிறந்தார். இது தற்போது உள்ள இலங்கை பகுதி ஆகும்.
எம்ஜிஆர் பிறந்த மாவட்டம்:
எம்ஜிஆர் ஒரு மலையாளி குடும்பத்தை சார்ந்தவர். இவரது தந்தை கேரளாவில் உள்ள பாலக்காடு பகுதியை சேர்ந்த மேலகாத் கோபாலன் மேனன் மற்றும் மருதூர் சத்தியபாமா என்ற தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். இவர், பிரித்தானிய சிலோன், கண்டி மாவட்டத்தில் உள்ள நாவலப்பட்டியில் பிறந்தார். இது தற்போதுள்ள இலங்கை பகுதி ஆகும்.
எம்ஜிஆர் நடித்த முதல் திரைப்படம்:
1. 1936-ஆம் ஆண்டு “சதிலீலாவதி” என்னும் திரைப்படம் தான் எம்ஜிஆர் நடித்த முதல் திரைப்படம் ஆகும்.
2. 1936-ஆம் ஆண்டு “இரு சகோதரர்கள்” எனும் திரைப்படம் எம்ஜிஆர் நடித்த இரண்டாவது திரைப்படமாகும்.
3. 1938-ஆம் ஆண்டு “தட்சயக்ஞம்” என்ற திரைப்படம் எம்ஜிஆர் நடித்த மூன்றாவது திரைப்படம் ஆகும்.
எம்ஜிஆர் அமைச்சரவை:
எம்ஜிஆர் 1977,1980,1984 ஆகிய மூன்று ஆண்டுகள் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்ற தமிழகத்தின் முதலமைச்சராக பணியாற்றினார்.நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.1977 முதல் 1987-ஆம் ஆண்டு வரை தன்னுடைய இறக்கும் தருணத்தில் கூட தமிழகத்தின் முதலமைச்சராக பணியாற்றினார்.
எம்ஜிஆர் இறந்த ஆண்டு:
தமிழக மக்களுக்கு பல நன்மைகளை செய்து மாணவ,மாணவிகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்திய கொடை வள்ளல் எம்ஜிஆர் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக 1987-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
இவரது, இறப்பை தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.மீளா துயரத்தில் ஆழ்த்தியது. இவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
எம்ஜிஆர் பெற்ற விருதுகள்:
* எம்ஜிஆர் மறைவிக்கு பிறகு 1988-ஆம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு “பாரத ரத்னா” விருது வழங்கி கௌரவ படுத்தியது.
* கிருபானந்த வாரியார் என்பவரால் இவருக்கு “பொன்மனச் செம்மல்” என்ற சிறப்பு பெயர் வந்தது.
* திரைப்படத் துறையில் தமிழக மக்களால் மக்கள் திலகம், வாத்தியார், புரட்சித்தலைவர், இதய தெய்வம், புரட்சி நடிகர் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டார்.
(மேலும் எம்ஜிஆர் பற்றிய முழு தகவல்களுக்கு Wikipedia - வை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்)
Read Also:- காமராசர் வாழ்க்கை வரலாறு
