இலக்கண குறிப்பு

இலக்கண குறிப்பு அறிதல் | Ilakkanam Kurippu Arithal

Post views : [jp_post_view]

Table of Contents

இலக்கண குறிப்பு அறிதல் | Ilakkanam Kurippu Arithal

இலக்கண குறிப்பு

இலக்கணக்குறிப்பு என்றால் என்ன:

இலக்கணம் என்பது ஒரு சொல்லுக்கு உரிய பொருளை அறிவது இலக்கணக்குறிப்பு ஆகும்.

இதனை நாம் 31 வகையின் மூலம் ஒரு சொல்லின் பொருள்களை அறியலாம்.

• பண்புத்தொகை

• வினைத்தொகை

• பெயரெச்சம்

• வினையெச்சம்

• வியங்கோள் வினைமுற்று

• ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

• உவமைத்தொகை

• உருவகம்

• உம்மைத்தொகை

• எண்ணும்மை

• வினையாலணையும் பெயர்

• தொழிற்பெயர்

• உரிச்சொல் தொடர்

• அடுக்குத் தொடர்

• விளித்தொடர்

• வேற்றுமைத்தொகை

• செய்யுளிசை அளபெடை

• இன்னிசை அளபெடை

• இரு பெயரொட்டுப் பண்புத்தொகை

• இரட்டைக்கிளவி

• மரூவு

• செய்யுள் விகாரம்

• இடைக்குறை விகாரம்

• அன்மொழித்தொகை

• முற்றும்மை

• போலி

• வேற்றுமை உருகும், பயனும் உடன் தொக்க தொகை

• தன்மை பன்மை / ஒற்றுமை வினைமுற்று

• எதிர்மறை தொழிற்பெயர்

• முன்னிலை தொழிற்பெயர்

• முன்னிலை திரிந்த தொழிற்பெயர்

மேலே கூறப்பட்டுள்ள இந்த 31 வகையான இலக்கணங்களைக் கொண்டு ஒரு சொல்லின் இலக்கணத்தை நாம் எளிமையாக அறிந்து கொள்ளலாம்.

இனி இந்த இலக்கணக்குறிப்புகளின் முழுமையான விளக்கம் மற்றும் அவற்றை எடுத்துக்காட்டுடன் பார்க்கலாம்.

1. இலக்கண குறிப்பு – பண்புத்தொகை என்றால் என்ன:

நிறம், வடிவம், சுவை, அளவு, குணம் எண்ணிக்கை ஆகியவற்றை உணர்த்தும் பண்புப் பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர் சொல்லுக்கும் இடையில் “மை” விகுதியும், ஆகிய, ஆன என்னும் பண்பு உறுப்புகளும் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.

பண்பு தொகைக்கு எடுத்துக்காட்டு:

செங்காந்தள் = செம்மை + காந்தல்
(நிறம்)

வட்டத்தொட்டி = வட்டம் + தொட்டி (வடிவம்)

இன்மொழி = இனிமை + மொழி (சுவை)

நெடுந்தேர் = நெடுமை + தேர் (அளவு)

மூவேந்தர் = மூன்று + வேந்தர் (எண்ணிக்கை)

2. இலக்கண குறிப்பு – வினைத்தொகை என்றால் என்ன:

காலம் காட்டும் இடைநிலையும், பெயரெச்ச விகுதியும் மறைந்து நிற்க வினைப் பகுதியை தொடர்ந்து ஒரு பெயர் அமைந்து நிற்பது வினைத்தொகை எனப்படும்.

வினைத் தொகைக்கு எடுத்துக்காட்டு:

வினைத்தொகை காலம் கரந்த பெயரெச்சம் எனப்படுகிறது. இது மூன்று கால நிலைகளையும் உணர்த்தி வரும்.

வினைத்தொகை வீசு தென்றல்
இறந்த காலம் வீசிய தென்றல்
நிகழ்காலம் வீசுகின்ற தென்றல்
எதிர்காலம் வீசும் தென்றல்

3. இலக்கண குறிப்பு – பெயரெச்சம் என்றால் என்ன:

முற்றுப்பெறாத வினையானது ஒரு பெயர்ச்சொல்லை கொண்டு முடிவது பெயரெச்சம் என்று அழைக்கப்படுகின்றது.

பெயரெச்சத்திற்கு எடுத்துக்காட்டு:

“அ” என்ற விகுதியை கொண்டு இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் உணர்த்தலாம்.

எ.கா: படித்த பையன் – இறந்த காலம் (த்+அ)

படிக்கின்ற பையன் – நிகழ்காலம் (ற் + அ)

“உம்” என்ற விகுதியை கொண்டு எதிர்காலத்தை உணர்த்தும்.

எ.கா: படிக்கும் பையன் – எதிர்காலம் (க் + உம்)

4. இலக்கண குறிப்பு – வினையெச்சம் என்றால் என்ன:

முற்றுப்பெறாத வினையானது ஒரு வினைமுற்று கொண்டு முடிவது வினையெச்சம் ஆகும்.

வினையெச்சத்திற்கு எடுத்துக்காட்டு:

பாடி மகிழ்ந்தனர்,

பொதுவாக வினையெச்சம் ஆனது மூன்று காலநிலைகளையும், உணர்த்தி நிற்கும்.

படித்து முடித்தான் – இறந்த காலம்

படிக்கச் செல்கிறான் – நிகழ்காலம்

கண்டால் மகிழ்வான் – எதிர்காலம்

5. இலக்கண குறிப்பு – வியங்கோள் வினைமுற்று என்றால் என்ன:

வாழ்த்துதல், வைதல், வேண்டல் விதித்தல் பொருளில் வரும் வினைமுற்று ஆகும். இது காலம் காட்டாது.

மேலும் “க”, “இய”, “இயர்” என்ற விகிதிகளுடன் முடியும்.

வியங்கோள் வினைமுற்றுக்கு எடுத்துக்காட்டு:

வாழ்க, வாலி வாழிய வாழியியர், ஒழிக.

6. இலக்கண குறிப்பு – ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் என்றால் என்ன:

ஓர் எதிர்மறை பெயரெச்சத்தின் கடைசி எழுத்து கெட்டுவிடும். இது “ஆ” என்ற ஓசையுடன் முடியும்.

ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சத்திற்கு எடுத்துக்காட்டு:

எய்தாப் பழி தா = த் + ஆ

ஏமரா மன்னன் ரா = ர் + ஆ

7. இலக்கண குறிப்பு – உவமைத்தொகை என்றால் என்ன:

உருவாக்கும் பொருளுக்கும் (உவமேயம்) இடையில் உவம உருபு மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.

உவமைத் தொகைக்கு எடுத்துக்காட்டு:

மலர்க்கை (மலர் போன்ற கை)

பூக்கை, முத்துப்பால், பூஞ்சேக்கை, தாமரை நயனம், மலரடி, மலர் சேவடி, பூங்கொடி.

8. இலக்கண குறிப்பு – உருவகம் என்றால் என்ன:

உவமைத் தொகையை முன் பின்னாக மாற்றுவது, உவமையை பொறுமை ஏற்று இடையில் “ஆகிய” என்ற சொல் மறைந்து வருவது உருவகம் என அழைக்கப்படுகிறது.

உருவகம் எடுத்துக்காட்டு:

கால கழுதை, கோபத்தீ, கன்னியாகுமரி, மண்ணுலகம் தவமணி மார்பின், தாமரை நயனம்.

9. உவமைத்தொகை என்றால் என்ன:

இரு சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் “உம்” என்னும் இடைச்சொல் மறைந்து விடுவது உவமை தொகை என அழைக்கப்படுகிறது.

உவமைத் தொகைக்கு எடுத்துக்காட்டு:

தாய்செய், அண்ணன் தம்பி

மேற்கண்ட எடுத்துக்காட்டுகள் தாயும் சேயும், அண்ணனும் தம்பி என விருந்து பொருளை உணர்த்துகின்றன.

10. எண்ணும்மை என்றால் என்ன:

இரு சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் “உம்” என்னும் இடைச்சொல் வெளிப்படையாக வருவது எண்ணும்மை ஆகும்.

எண்ணும்மைக்கு எடுத்துக்காட்டு:

பாடுவதும் கேட்பதும், இல்லறனும் துறவனும்

11. வினையாலணையும் பெயர் என்றால் என்ன:

வினைமுற்று வினையை குறிக்காமல், வினை செய்தவரை குறித்தால் அது வினையாலணையும் பெயர் எனப்படும்.

இது தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்களிலும், இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய மூன்று காலங்களிலும் அமைந்து வரும்.

வினையாலணையும் பெயருக்கு எடுத்துக்காட்டு:

அகழ்ந்தாரை – இறந்த காலம்

அகழ்கின்றாரை – நிகழ்காலம்

அகழ்வாரை – எதிர்காலம்

12. தொழிற்பெயர் என்றால் என்ன:

ஒரு வினை அல்லது செயலை குறிக்கும் பெயரானது எண், இடம், காலம், பால் ஆகியவற்றை குறிப்பாகவோ வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருவது தொழிற்பெயர் ஆகும்.

தொழிற்பெயருக்கு எடுத்துக்காட்டு:

ஈதல், நடத்தல்

13. உரிச்சொல் தொடர் என்றால் என்ன:

தனித்து இயங்கும் ஆற்றல் இல்லாத சால, உறு, தவ, நனி, கூர், கழி, வான், மா, தட, வை, மழ, கடி போன்ற உரிச்சொல் சொற்களுடன் பெயரோ வினையோ தொடர்ந்து வருவது உரிச்சொல் தொடராகும்.

உரிச்சொல் தொடருக்கு எடுத்துக்காட்டு:

தடக்கை, மாமலர், சாலச் சிறந்தது.

14. அடுக்குத்தொடர் என்றால் என்ன:

இரண்டு அல்லது மூன்று முறை அர்த்தமுள்ள சொற்கள் அடிக்கி தொடர்ந்து வருவதும், பிரித்தால் பொருள் தருவதும் அடுக்குத் தொடராகும்.

அடுக்குத் தொடருக்கு எடுத்துக்காட்டு:

ஊழ் ஊழ், எவ்வெவை, வா வா, நன்று நன்று

15. விழித்தொடர் என்றால் என்ன:

ஒருவரை அழைத்தார் பொருட்டு விழிக்கும் தொடர் விழித்தொடர் எனப்படும். விழிவுடன் வினைத் தொடர்வது விழித்தொடர் ஆகும்.

விழித்தொடருக்கு எடுத்துக்காட்டு:

நண்பா எழுது, புலவீர்

16. வேற்றுமைத்தொகை என்றால் என்ன:

ஒரு தொடரில் வேற்றுமை உறுப்புகளில் ( ஐ, ஆல், இன், அது கண்) ஒன்று மறைந்து வந்து பொருள் உணர்த்துவது வேற்றுமை தொகை ஆகும்.

வேற்றுமை துறைக்கு எடுத்துக்காட்டு:

மதுரை சென்றார் (மதுரைக்குச் சென்றார்)

மொழி கற்றான் – இரண்டாம் வேற்றுமை தொகை

தலை வணங்கினான் – மூன்றாம் வேற்றுமைத்தொகை

கல்லூரி சென்றாள் – நான்காம் வேற்றுமை தொகை

கண் கடைப்பார்லை, மலையருவி – ஏழாம் வேற்றுமை தொகை

கண்பார்வை – வேற்றுமை தொகை

17. செய்யுளிசை அளபெடை என்றால் என்ன:

செயலில் ஓசை குறையும்போது உயிர் நெடில் எழுத்துக்கள் தன் ஓசையில் மிகுந்து ஒலிக்கும். அப்படி ஒலிக்கும் போது அதற்கு இனமான குற்ற எழுத்து அருகில் எழுதப்படும். இது “இசை நிறை அளபெடை” எனவும் அழைக்கப்படும்.

செய்யுளிசை அளபெடைக்கு எடுத்துக்காட்டு:

ஓஒதல் வேண்டும் – மொழி முதல்

உராஅர்க்கு உருநோய் – மொழி இடை

நல்ல படா அறை – முழு இறுதி

18. இன்னிசை அளபெடை என்றால் என்ன:

செயலில் ஓசை குறையாத இடத்திலும் இமைக்காக குறில் நெடிலாய் மாறி அளபெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும். இது “தூஉம்” என்று முடியும்.

இன்னிசை அளபெடைக்கு எடுத்துக்காட்டு:

கொடுப்பதுதூஉம், உண்பதுஉம், துய்ப்பதூஉம்

19. இரு பெயரொட்டுப் பண்புத்தொகை என்றால் என்ன:

சிறப்பு பெயர் முன்னும், பொதுப்பெயர்ப் பின்னும் நின்று இடையில் “ஆகிய” என்னும் பண்பு உருபு தொக்கி வருவது இரு பெயரிட்டு பண்புத்தொகை எனப்படும்.

இரு பெயரிட்டு பண்பு தொகைக்கு எடுத்துக்காட்டு:

சாரைப்பாம்பு, மார்கழி திங்கள், பருத்தினுள்,தமிழ் மொழி

20. இரட்டைக்கிளவி என்றால் என்ன:

பொருள் இல்லாத ஒரே சொல் இரண்டு முறை அடுக்கி வந்து பொருள் தருவது இரட்டைக்கிளவி ஆகும்.

இரட்டைக்கிளவிக்கு எடுத்துக்காட்டு:

சலசலவென்று தண்ணீர் ஓடியது, கலகலவென்று சிரித்தாள், மடமடவென மரம் முறிந்தது.

21. மரூஉ என்றால் என்ன:

எழுத்துக்கள் சிதைந்து உருமாறி வழங்கி வருவது மரூஉ ஆகும்.

இயற்சொல்  மரூஉசொல்
தஞ்சாவூர்  தஞ்சை
புதுச்சேரி புதுவை
கும்பகோணம்  குடந்தை
எம் தந்தாய்  என் தாய்

 

22. செய்யுள் விகாரம் என்றால் என்ன:

செய்யுளில் அசை, சீர், தலை, அடி, தொடை முதலிரவற்றில் சில இடங்களில் ஓர் எழுத்து மாறுபட்டோ அல்லது ஓர் எழுத்து குறைந்த காணப்படுவது செய்யுள்விகாரம் எனப்படும்.

செய்யுள் விகாரம் எத்தனை வகைப்படும்:

செய்யுள் விகாரம் ஒன்பது வகைப்படும். அவை

•வலித்தல் விகாரம்

• மெலித்தல் விகாரம்

• நீட்டல் விகாரம்

• குறுக்கள் விகாரம்

• விரித்தல் விகாரம்

• தொகுத்தல் விகாரம்

• முதற்கொறை

• இடைக்குறை

• கடைக்குறை

செய்யுள் விகாரத்திற்கு எடுத்துக்காட்டு:

காக்கென்று – காக்கா வென்று என்பதன் தொகுத்தல் விகாரம்

23. இடைக்குறை விகாரம் என்றால் என்ன:

ஒரு சொல்லின் இடையில் ஓர் எழுத்து குறைந்தாலும் பொருள் மாறாமல் வருவது இடை குறை எனப்படும்.

இடைக்குறை விகாரத்திற்கு எடுத்துக்காட்டு:

கண்ணீர் (கண்ணீர் என்பதன் எடை குறை)

கடிந்ததெனை (என்னை என்பதன் எடை குறை)

உவம் – உவ்வம் என்பதன் எடை குறை

24. அன்மொழித்தொகை என்றால் என்ன:

வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உமை ஆகிய தொகைநிலைத் தொடர்களுக்கு புறத்தே அல்லாத சில வேறு சொற்கள் நின்று பொருள் தருவது அன்மொழித்தொகை எனப்படும்.

அன்மொழி தொகைக்கு எடுத்துக்காட்டு:

சிவப்பு சட்டை வந்தார், பூங்குழல் வந்தால், முறுக்கு மீசை வந்தார்.

25. முற்றும்மை என்றால் என்ன:

முற்றுப் பொருளை தருவதற்காக வருகின்ற “உம்” முற்றுமை ஆகும். இது “முழுவதும்” என்னும் பொருளைத் தரும்.

முற்றுமைக்கு எடுத்துக்காட்டு:

யாண்டும்

26. போலி என்றால் என்ன:

ஒரு சொல்லில் உள்ள ஓர் எழுத்து அல்லது பல எழுத்துகளோ மாறி அமைந்து, பொருள் மாறாமல் இருப்பது போலி எனப்படும்.

27. வேற்றுமை உருபு பயனும் உடன் தொக்க தொகை என்றால் என்ன:

ஒரு தொடரில் வேற்றுமை உருபு அதன் பொருளை விளக்கும் பயணம் சேர்ந்து வருவது வேற்றுமை உருப்பும் பயணம் உடன் தக்கதாக எனப்படும்.

வேற்றுமை உருபு பயணம் உடன் தொக்க தொகை எடுத்துக்காட்டு:

மனச்சுமை – ஏழாம் வேற்றுமை உருபு பயனும் உடன் தொக்கு தொகை

தற்காத்து – இரண்டாம் வேற்றுமை உருபு பயணம் உடன் தொக்க தொகை

கைமுறை – மூன்றாம் வேற்றுமை உருபு பயணம் உடன் தொக்க தொகை

28. தன்மை பன்மை ஒருமை வினைமுற்று என்றால் என்ன:

அம், ஆம், எம், எம், ஓம் – விகுதிகளுடன் முடியும் வினைமுற்று தன்மை வினைமுற்று. அன், ஆன், என், ஏன் விதிகளுடன் முடியும் உன்னை முற்று தன்மை ஒருமை வினைமுற்று.

எடுத்துக்காட்டு:

தொலைத்தேன், வாழ்ந்தேன் – தன்மை ஒருமை வினைமுற்று

வாழ்வோம் – தன்மை பன்மை வினைமுற்று

29. எதிர்மறை தொழிற்பெயர் என்றால் என்ன:

எதிர்மறை பொருளில் வருவது எதிர்மறை தொழிற்பெயர் ஆகும்.

எதிர்மறை தொழிற்பெயருக்கு எடுத்துக்காட்டு:

நடவாமை, கொல்லாமை

30. முன்னிலை தொழில் பெயர் என்றால் என்ன:

விகுதி பெறாமல் வினைப் பகுதியே தொழிற்பெயராதல் முன்னிலை தொழிற் பெயராகும்.

முன்னிலை தொழிற்பெயருக்கு எடுத்துக்காட்டு:

தட்டு, உரை, அடி

31. முன்னிலை திரிந்த தொழிற்பெயர் என்றால் என்ன:

இவை விகுதி பெறாமல் முன்னிலை திரிந்து வரும் தொழிற்பெயர்கள் ஆகும்.

முன்னிலை திரிந்த தொழிற்பெயருக்கு எடுத்துக்காட்டு:

 

தொழிற்பெயர் கெடுதல் சுடுதல்
முன்னிலை தொழிற்பெயர்  கெடு சுடு
முன்னிலை திரிந்த தொழிற்பெயர் கேடு சுட

 

மேலும், பல்வேறு தகவல்களுக்கு தொடர்ந்து படியுங்கள்  Mttamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *