பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வாழ்க்கை | Pattukottai Kalyanasundaram valkai varalaru

Post views : [jp_post_view]

Table of Contents

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வாழ்க்கை வரலாறு

Pattukottai Kalyanasundaram valkai varalaru
கல்யாணசுந்தரம்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்:

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Pattukottai Kalyanasundaram valkai varalaru – இவர் ஒரு மிகச் சிறந்த தமிழ் சிந்தனையாளர் மற்றும் அறிஞர் எண்ணற்ற நூல்களை எழுதிய பாடல் ஆசிரியர், எளிமையான சமூக சீர்திருத்த கருத்துக்களை மக்களுக்கு கொண்டு செல்வதில் அரும்பாடு பட்டவர். இவரின் வாழ்க்கை வரலாற்றை நம்முடைய வலைதளமான Mttamil – ல் முழுமையாக பார்க்கலாம்.

Biography of Pattukottai Kalyanasundaram in Tamil

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – கல்யாணசுந்தரம்.

கல்யாணசுந்தரம் பிறந்த ஊர் – பட்டுக்கோட்டையில் உள்ள செங்கம் படுத்தான் காடு

கல்யாணசுந்தரம் பிறந்தநாள் – 13.04.1930

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பெற்றோர் பெயர் – அருணாச்சலம் விசாலாட்சி

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் உடன் பிறந்தவர்கள் – கணபதி சுந்தரம் – வேதநாயகி

கல்யாணசுந்தரத்தின் வேறு சிறப்பு பெயர்கள் – மக்கள் கவிஞர், அ. கல்யாணசுந்தரம்

பட்டுக்கோட்டை கல்யாணராமன் செய்த வேலைகள்- விவசாயி, தேங்காய் வியாபாரி, அரசியல்வாதி, மாடு மேய்ப்பவர், கீற்று வியாபாரி, பாடகர், மாட்டு வியாபாரி, தண்ணீர் வண்டிக்காரர், நடிகர், மாம்பழ வியாபாரி, நடனக்காரர், உப்பளத் தொழிலாளி, இட்லி வியாபாரி, மிஷின் டிரைவர், முறுக்கு வியாபாரி, மீன்பிடித்தல் தொழில் மற்றும் இறுதியாக கலைஞர்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பிறப்பு:

Pattukottai Kalyanasundaram Life History – இவர் தற்போது தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டைக்கு அருகே சங்கம்படுத்தான்காடு என்கிற ஊரில் 13/04/1930 அன்று பிறந்தார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகள்:

கல்யாண சுந்தரத்தின் தந்தை பெயர் அருணாச்சலம் மற்றும் இவரது தாயார் விசாலாட்சி ஆவார். இவருக்கு கணபதி சுந்தரம் என்ற மூத்த அண்ணனும் மற்றும் வேதநாயகி என்ற ஒரு சகோதரியும் உள்ளனர்.

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனாரின் திருமண வாழ்க்கை:

இவர் தம் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். இவருடைய மனைவி பெயர் கௌரவம் பால். திருமணமாகி ஐந்து வருடம் கழித்து இவருக்கு குழந்தை பிறந்தது. மேலும் இவருடைய பிறந்த அதே ஆண்டில் இவரும் மரணம் அடைந்தது அவருடைய குடும்பத்தில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது.

இவர் இருக்கும் பொழுது இவருடைய குழந்தையின் வயது 5 மாதம் ஆகும்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய விரிவான விளக்கம்:

எண்ணற்ற பரிமாணங்களில் வாழ்ந்து காட்டியவர். அதாவது விவசாயி முதல் நடிகர், கவிஞர், மாடு மேய்ப்போர் என பல்வேறு தொழில்களையும் செய்து வந்தவர். கல்யாணசுந்தரனார் இளம் வயதிலேயே விவசாய சங்கத்திலும் பொதுவுடமை கட்சி அல்லது கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் அதிகமாக ஈடுபாடு கொண்டிருந்தவர்.

சாதாரண பள்ளி படிப்பு மட்டுமே அப்போது படித்து முடித்து இருந்தார். மேலும் இவருக்கு 19 வயது இருக்கும் பொழுது கவி பாடும் திறமையில் அதிக ஆர்வம் கொண்டவராய் இருந்தார். இதன் காரணத்தினாலேயே பிற்காலத்தில் திரைப்படங்களில் பாடல்கள் எழுதுவதிலும் மற்றும் அடிப்பதிலும் இவருக்கு வழி கிடைத்தது.

இவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் எழுச்சி மிக்கவையாகவும் உணர்ச்சிகளை தூண்டும் வகையிலும் இருந்ததால் இவருடைய பாடல்கள் அனைவராலும் மிகுந்த வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் எழுதிய பாடல்களின் சிறப்புகள்:

கல்யாண சுந்தரனார் அவர் வாழ்ந்த காலத்தில் நடித்த எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி ஆகியோரின் பழங்களில் தத்துவம் மற்றும் பாசம் வீரம் ஆகியவை நிறைந்த பாடல்களை அனைவரும் கவரும் வண்ணத்தில் எழுதினார்.

அவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பரவத் தொடங்கின. எம்ஜிஆருக்கு எழுதிய பாடல்கள் ஒரு படி உயர்ந்து அப்ப பாடல்களின் மூலம் எம்ஜிஆர் போலின் உச்சத்திற்கு சென்றார் என்பதுதான் உண்மை.

Pattukottai Kalyanasundaram valkai varalaru

• நாடோடி மன்னன்

• கலையரசி

• அரசிளங்குமாரி

• சக்கரவர்த்தி திருமகள்

• மகாதேவி

• விக்ரமாதித்தன்

• திருடாதே

• மக்களை பெற்ற மகராசி

• அம்பிகாபதி

• பதி பக்தி

• பாகப்பிரிவினை

• உத்தமபுத்திரன்

• தங்கப்பதுமை

• புனர்ஜென்மம்

• கல்யாண பரிசு

• ரத்தினபுரி இளவரசி

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து திரைப்படங்களுக்கும் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் பாடல்களை எழுதியுள்ளார். இதில் கல்யாண பரிசு எனும் திரைப்படத்தில் வந்த அனைத்து பாடல்களுமே முழுமையான வெற்றி பெற்றது.

பொது சேவைகளில் கல்யாண சுந்தரனாரின் ஆர்வம்:

சாதாரண பள்ளி படிப்பை மட்டுமே முடித்து இருந்த கல்யாணசுந்தரம் இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் கட்சிகளில் சேர்ந்தார். இதனால் அக்கட்சிக்கு அரும்பாடு பட்டு உழைத்து அக்கட்சியின் கொள்கைகளை மேம்பட உதவினார்.

தஞ்சாவூரைச் சேர்ந்த வீர தியாகிகள், சிவராமன் இரணியன் ஆகிய மூவருடன் இணைந்து விவசாய இயக்கம் என்பதை தொடங்கி அதன் வளர்ச்சிக்கு தீவிர பங்காற்றையும் வந்துள்ளார்.

மேலும் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் நடிப்பின் மீது அதீத ஆர்வம் கொண்டவராய் விளங்கியதால் “சக்தி நாடக சபா” என்னும் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனாரின் நெருங்கிய நண்பராக ஓ.ஏ.கே தேவர் என்பவர் இருந்தார்.

கல்யாண சுந்தரனாரின் திறமையை கண்டு வியந்த திரையுலகம், அவர் இயற்றிய நாடகத்தில் நடித்த கலைஞர்கள் அனைவரும் சினிமாவுக்குள் சென்றனர்.

அதன் பின்னர் கல்யாண சுந்தரனார் பாரதிதாசனிடம் உதவியாளராக இருந்து எழுதும் கலையை கற்றுக்கொண்டு கவிஞராக மாறினார்.

இவர் முதன் முதலில் எழுதிய ‘படித்த பெண்’ என்ற திரைப்படத்திற்கான பாடல்கள் அனைத்தும் மிகவும் வரவேற்பை பெற்று அவருக்கு வெற்றியும் தேடிக் கொடுத்தது.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திற்கு தமிழ்நாடு அரசு செய்த கௌரவம்:

தமிழ்நாடு அரசு இவரின் நினைவை போற்றும் வகையில் பட்டுக்கோட்டையில் “பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மணிமண்டபம்” என்ற பெயரில் மணிமண்டபம் ஒன்று அமைத்துள்ளது.

அந்த மணிமண்டபத்தில் அவருடைய வாழ்க்கை பற்றிய புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டு இன்று வரை பராமரிக்கப்பட்டு வருகிறது.

ஒரு எழுத்தாளனாக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பங்கு:

• கல்யாண சுந்தரனார் எழுதிய பாடல்கள் அனைத்தும் கிராமிய பின்னணியை தழுவியதாக இருந்தது.

• மேலும் இவருடைய பாடல்கள் உணர்ச்சிகளை தூண்டும் வகையிலும் அமைந்தன.

• இவர் எழுதிய பாடல்கள் அனைத்திலும் குறைகளை சுட்டிக்காட்டியும் அதனை எவ்வாறு வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றியும் அமைந்தது.

• ஒரு ஏழை பாட்டாளி மக்களின் உணர்ச்சிகளையும் ஆசைகளையும், சமூகத்திற்கு வெளிப்படுத்த தன் பாடல்களின் மூலம் உலகிற்கு எடுத்துரைத்தார்.

• இவருடைய பல்வேறு வகையான பாடல்கள் “ஜனசக்தி பத்திரிக்கை” என்னும் இதழின் மூலம் வெளியிடப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனாரின் உணர்ச்சிமிகு பாடல் வரிகள் சில:

1. வேப்பமரம் உச்சியில் நின்று பேய் என்று ஆடுதுன்னு விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க – உன் வீரத்தை கொழுந்திலையே கிள்ளி வைப்பாங்க.. வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாக கூட நம்பி விடாதே – நீ வீட்டுக்குள் பயந்து கிடந்து விடாதே

2. மேடு பள்ளம் அற்ற சமுதாயம் உருவாக செதுக்கப்பட்டது வளர்ந்து வரும் உலகத்திற்கு நீ வலது கையடா தனி உடைமை கொடுமைகள் தொண்டு செய்யடா, தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனாரின் இறப்பு:

• 1959 ஆம் ஆண்டு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனாருக்கு மூக்கில் ஒரு சிறிய கட்டி ஏற்பட்டது.

• இதனால் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

• பின்னர் அவருக்கு ஒரு சிறிய ஆப்ரேஷன் நடந்தது. மீண்டும் வீடு திரும்பி அவர்.

• சிறிது நாட்களிலேயே மறுபடியும் அவருடைய மூக்கில் கட்டி வர தொடங்கியது.

• இதனால் மீண்டும் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் சேர்க்கப்பட்டார்.

• சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே 8/10/1959 அன்று யாரும் எதிர்பாராத வகையில் மரணம் அடைந்தார்.

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் கிடைத்த விருதுகள்:

கல்யாண சுந்தரனார் மறைவுக்கு பின்னர் அவருடைய உடலுக்கு திராவிட முன்னேற்றக் கழக தலைவரான கருணாநிதி மற்றும் எம்ஜிஆர், சந்திரபாபு மற்றும் திரையுலக டைரக்டர்கள் அனைவரும் நேரடியாக வந்து மரியாதை செலுத்தினார்கள்.

1981 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனாருக்கு “பாவேந்தர்” எனும் விருது வழங்கப்பட்டது.

இந்த விருதுநை அவருடைய மனைவியான கௌரவாம்பாள் எம்ஜிஆர் அவர்களின் இருந்து பெற்றுக் கொண்டார்.

மேலும் கல்யாண சுந்தரனாருக்கு 2000 ஆவது ஆண்டில் அவருடைய முழு திருவுருவ சிலையும் வைக்கப்பட்டது.

அவருக்கு கட்டப்பட்ட மணிமண்டபத்தில் அவருடைய புகைப்படங்கள் மற்றும் அவர் எழுதிய பத்திரிகைகள் கையெழுத்து பிரதிகள் ஆகியவையும் மக்கள் பார்வைக்காக இன்றுவரை வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

(மேலும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய முழு தகவல்களுக்கு Wikipedia – வை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *