இந்தியாவின் முதல் 10 சுதந்திரப் போராட்ட வீரர்கள் – Freedom fighters of Tamil Nadu

இந்தியாவின் முதல் 10 சுதந்திரப் போராட்ட வீரர்கள்

இந்தியாவின் முதல் 10 சுதந்திரப் போராட்ட வீரர்கள் – Freedom fighters of Tamil Nadu வ.உ.சி சுதேசி கப்பல் ஓட்டிய வரலாறு இந்தியாவின் முதல் 10 …

Read more

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் – Tamilnadu Important Places

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் – Tamilnadu Important Places தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்:- இன்று நாம் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கக்கூடிய முக்கியமான கோவில் மற்றும் …

Read more

தீபாவளி உண்மை வரலாறு – Diwali History in Tamil

தீபாவளி உண்மை வரலாறு

தீபாவளி உண்மை வரலாறு – Diwali History in Tamil தீபாவளி உண்மை வரலாறு: தீபாவளி உண்மை வரலாறு:- நம் இந்தியாவில் ஏராளமான பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக …

Read more

கலைஞர் மு.கருணாநிதி வாழ்க்கை வரலாறு || Kalaignar M.Karunanidhi History in Tamil

கலைஞர் மு.கருணாநிதி வாழ்க்கை வரலாறு

கலைஞர் மு.கருணாநிதி வாழ்க்கை வரலாறு || Kalaignar M.Karunanidhi History in Tamil கலைஞர் மு.கருணாநிதி வாழ்க்கை வரலாறு: இந்திய அரசியலில் ஏராளமானவர் சாதனை படைத்துள்ளனர் அதிலும் …

Read more

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு || J.Jayalalitha history in tamil

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு || J.Jayalalitha history in tamil

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு:

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு:-  தமிழகத்தில் எண்ணற்ற மூத்த அரசியல்வாதிகள் இருந்தாலும் 6-முறை தமிழகத்தில் முதல் பெண் முதலமைச்சராக பணியாற்றிய வீரமான பெண்மணிதான் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.
இவர், அரசியல்வாதி மட்டுமில்லாமல் ஒரு சிறந்த தமிழ் சினிமா நடிகையாவார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்.

வாழ்க்கை வரலாறு சுருக்கம் || ஜெயலலிதா பிறந்த தேதி

பெயர் – ஜெ.ஜெயலலிதா

இயற்பெயர் – கோமலவல்லி

பிறந்த வருடம் மற்றும் தேதி – 1948-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி

பெற்றோர் – ஜெயராம் மற்றும் வேதவள்ளி

பிறந்த ஊர் – மைசூர்

இறப்பு – 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மறைந்தார்.

பிறப்பு :

ஜெ.ஜெயலலிதா அவர்கள், 1948-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி ஜெயராம் மற்றும் வேதவல்லி தம்பதியினருக்கு மகளாய் கர்நாடகாவில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் பிறந்தார். பெற்றோர்கள் வைத்த பெயர் கோமளவல்லி. பள்ளியில் சேர்ப்பதற்காக முதல் வயதில் அவருடைய பெயர் ஜெயலலிதாவாக மாற்றப்பட்டது.

1950-ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் இரண்டாம் வயதில் இவருடைய தந்தை காலமானார். அதன் பிறகு, இவருடைய குடும்பம் மிகவும் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டது.

ஆரம்ப கால கல்வி வாழ்க்கை:

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு:- சிறிது காலம் பெங்களூரில் வசித்து வந்த போது ஜெயலலிதாவின் அம்மாவிற்கு சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால், அவர்களின் குடும்பம் 1958-ஆம் ஆண்டு சென்னைக்கு குடி பெயர்ந்தது.

அப்போது சென்னையில் உள்ள சர்ச் பார்க் கான்வென்டில் தன்னுடைய பள்ளிப்படிப்பை படித்தார் ஜெயலலிதா. பள்ளி படிப்புகளில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக இடம் பிடித்தார். அதனோடு, உயர் படிப்பு படிப்பதற்காக கல்வி ஊக்கத் தொகையும் பெற்றார். இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் குடும்ப சூழ்நிலை காரணமாக திரைப்படங்களில் நடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

திரைபடத்துறையில் ஜெயலலிதா:

வழக்கறிஞராக வேண்டும் என்ற கனவை தன்னுடைய தாயின் விருப்பத்திற்காக தியாகம் செய்து சினிமா திரைப்படத்தில் நடிக்க சிறிதும் விருப்பமின்றி கொண்டு நடித்தார்.

முதன் முதலில் 19561-ஆம் “ஸ்ரீ ஷைல மஹாத்மே” என்ற கன்னட மொழி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தனது திரைப்பட வாழ்க்கை பயணத்தை தொடங்கினார்.

1965-ஆம் ஆண்டு தமிழ் மொழியில் முதன் முதலில் “வெண்ணிற ஆடை” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என தனது வாழ்நாளில் 140-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அரசியல் களத்தில் ஜெயலலிதா || எம்ஜிஆர் ஜெயலலிதா வரலாறு:

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு: மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த எம்..ஜி.ராமச்சந்திரன் அவர்கள் அண்ணாவிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தினால் தி.மு.க கட்சியில் இருந்து விலகி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். எம்.ஜி.ஆர் கட்சியின் பிரச்சார கூட்டத்திற்கு பேசுவதற்காக ஜெயலலிதாவை தன்னுடன் இணைந்து கொண்டார்.

1984-ஆம் ஆண்டு முதல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியில் தன்னையும் ஒரு உறுப்பினராக இணைத்துக் கொண்டார் ஜெயலலிதா. தன்னுடைய கடின உழைப்பால் பல கஷ்டங்களைக் கடந்து தன்னுடைய திறமைகளை அரசியலில் நிரூபித்துக் காட்டினார்.

1987-ஆம் ஆண்டு திரைப்படங்களில் மக்களை மகிழ்வித்த எம்.ஜி.ஆர் அவர்கள் உடல்நிலை குறைவால் காலமானார். 1989 ஆம் ஆண்டு அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டார் ஜெயலலிதா. சட்டசபையில் முதல் முறையாக பெண் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.

மக்கள் நல திட்டங்கள் || ஜெயலலிதா சாதனைகள்:

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு: ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த பொழுது பல்வேறு வகையான நலத்திட்டங்களை மாணவர்களுக்கும், குறிப்பாக பெண்களுக்காகவும் அறிமுகப்படுத்தினார்.

• இரண்டாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்ற செல்வி ஜெ ஜெயலலிதா அம்மா அவர்கள் மக்களுக்காக ஒவ்வொரு நலத்திட்டங்களையும் செயல்படுத்த தொடங்கினார்.

• அப்போது மிகவும் தீய மற்றும் கொடிய பழக்கங்களாக இருந்த லாட்டரி சீட்டுகள் விற்பனை, மதுவிலக்கு, புகையிலை போன்ற உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களை எல்லாம் தடை செய்தார்.

• பெண்களை காவல்துறையில் சேர அதிக அளவு இட ஒதுக்கீடு செய்து ஊக்கப்படுத்தினார்.

• பெண்களுக்கு “தங்கத்தால் தாழி” வழங்கும் திட்டம் கொண்டு வந்ததால் ஏராளமான பெண்களுக்கு பெரும் உதவியாக இருந்தது.

• அதிக அளவில் பணம் கொடுத்து உணவகத்தில் உணவு உண்ண முடியாதவர்களுக்கு தமிழகம் முழுவதும் “அம்மா உணவகம்” என்று ஒரு உணவகம் ஆரம்பித்து மிக மிகக் குறைந்த விலையில் 3-நேரமும் உணவு வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள ஏராளமான மக்கள் மூன்று வேளையும் பசியின்றி நிம்மதியாக வாழ முடிந்தது.

• 12-ஆம் வகுப்பு படித்த மாணவ, மாணவியர்களுக்கு கல்லூரியின் மேல் படிப்பிற்கு உதவும் வகையில் இலவசமாக தமிழக முழுவதும் “மடிக்கணினி” வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதனால், ஏராளமான மாணவ, மாணவியர்கள் மேல் படிப்பில் தேர்ச்சி பெற்று பல துறைகளில் இன்று சாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

• அது போன்று வீடுகளில் பெண்களின் வேலைகளை குறைப்பதற்காக மிக்ஸி, கிரைண்டர், டேபிள் ஃபேன் போன்ற பொருட்களை எல்லாம் இலவசமாக வழங்கி பெண்களின் சுமைகளை குறைத்தார்.

• பேருந்து நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதில் பெண்களுக்கு சிரமமாக இருப்பதால் தாய்ப்பால் ஊட்டுவதற்கான தனியாக அறைகளை கட்டிக் கொடுத்தார்.

• 24-மணி நேரமும் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு மருத்துவ சேவை அழிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.

• பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழக அரசு மருத்துவமனைகளில் “இலவசமாக குழந்தைகளை பராமரிக்கும் பொருட்களை” வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்.

“அம்மா காப்பீட்டு திட்டம்” என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி அதில் பதிவு செய்து கொண்ட அனைவருக்கும் ஏதேனும் ஒரு நிகழ்வு நடந்தால் மருத்துவமனைகளில் அந்த சீட்டை காண்பித்து மிகக் குறைந்த செலவில் மருத்துவம் பார்த்துக் கொள்ளும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

“அம்மா குடிநீர்” என்னும் திட்டத்தால் தண்ணீர் எடுக்க பல கிலோமீட்டர் சென்று கஷ்டப்படும் கிராம மக்களுக்கு ஊருக்கு ஒரு தண்ணீர் தொட்டி கட்டி கொடுத்து அவர்களை சிரமத்தில் இருந்து காப்பாற்றினார்.

• விலை உயர்ந்த மருந்து, மாத்திரைகளை வாங்க மக்கள் கஷ்டப்பட்ட நேரத்தில் “அம்மா பார்மஸி” என்ற மருந்து கடைகளில் தமிழக முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டு மிக மிகக் குறைந்த விலையில் மருந்து, மாத்திரைகள் மக்களுக்கு வழங்கப்பட்டது.

• அன்று அவர் ஆட்சி காலத்தில் பசி எனும் கொடி நோயை போக்குவதற்காக உருவாக்கப்பட்டஅம்மா உணவகம்” இன்றளவும் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது.

இது போன்று ஏராளமான, எண்ணற்ற சொல்லில் அடங்கா பல நலத்திட்டங்களை மாணவர்களுக்காகவும், மக்களுக்காகவும், குறிப்பாக பெண்களுக்காகவும் செல்வி.ஜெ.ஜெயலலிதா அம்மா அவர்கள் அவரது ஆட்சி காலத்தில் உருவாக்கி அதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளார்.

ஜெயலலிதா ஆட்சி காலம்:

1. 1991 முதல் 1996 வரை முதன் முதலில் முதலமைச்சராக பதவி ஏற்றார்.

2. 2001 ஆம் ஆண்டில் சில மாதங்கள் முதலமைச்சராக பணியாற்றினார்.

3. 2002 முதல் 2006 வரை மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

4. 2011 முதல் 2014 வரை நான்காவது முறையாக முதலமைச்சர் பதவி ஏற்று தமிழகத்தை வழி நடத்தினார்.

5. 2015 முதல் 2016 வரை ஐந்தாவது முறையாக அடுத்தடுத்து தொடர்ந்து தமிழக முதல்வராக பதவி ஏற்றார்.

6. 2016 மே 23 முதல் 2016 டிசம்பர் 5-ஆம் தேதி வரை தொடர்ந்து அடுத்தடுத்து ஆறாவது முறையாக தமிழகத்தின் முதல்வராக பணிபுரிந்த செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள் 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி உடல் நலக் குறைவால் முதலமைச்சர் பதவியில் இருக்கும் பொழுதே காலமானார்.

இறப்பு || ஜெயலலிதா வயது:

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு: தமிழகத்தில் 6-முறை முதலமைச்சராக பணியாற்றி மக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களையும், பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு எண்ணற்ற உதவிகளையும் செய்து கொடுத்த புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா அம்மா அவர்கள், 2016-ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையான அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிட்டத்தட்ட 80-நாட்களுக்கு மேல் உடல் நலக் குறைவால் போராடிய செல்வி.ஜெ.ஜெயலலிதா அம்மா அவர்கள், சிகிச்சை பலனின்றி தன்னுடைய 69-வது வயதில் 2016-ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார்.

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட விருதுகள்:

• தமிழக அரசு ஜெயலலிதா அவர்களுக்கு, “கலைமாமணி” விருது வழங்கி கௌரவப்படுத்துகிறது.

• டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு மருத்துவக் பல்கலைக்கழகம் “அறிவியலுக்கான கௌரவ டாக்டர் பட்டம்” வழங்கி சிறப்பித்தது.

• டாக்டர்.அம்பேத்கர் அரசு சட்ட பல்கலைக்கழகம் “சட்டத்திற்கான கௌரவ டாக்டர்” பட்டத்தை வழங்கி கௌரவப்படுத்தியது.

• தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் “அறிவியலுக்கான கவுரவம் டாக்டர் பட்டம்” வழங்கி பெருமைப்படுத்தியது.

“கடிதங்ளுக்கான டாக்டர் பட்டத்தை” தமிழக பாரதிதாசன் பல்கலைக்கழகம் வழங்கி சிறப்பித்தது.

• மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் “கடிதங்களுக்கான டாக்டர் படத்தை” வழங்கி கௌரவ படுத்தியது.

“இலக்கியத்தில் கௌரவ டாக்டர் பட்டத்தை” சென்னை பல்கலைக்கழகம் வழங்கி பெருமைப்படுத்தியது.

“சூரியகாந்தி” என்ற தமிழ் திரைப்படம் சிறந்த தமிழ் நடிகைக்கான ‘பிலிம் பேர் விருதினை’ இவருக்கு பெற்று தந்தது.

“ஸ்ரீ கிருஷ்ணா சத்யா” என்கிற திரைப்படம் சிறந்த தெலுங்கு நடிகைக்கான ‘பிலிம் பேர் விருதினை’ இவருக்கு பெற்று தந்தது.

“பட்டிக்காடா பட்டணமா” என்ற திரைப்படம் சிறந்த தமிழ் நடிகைக்கான ‘பிலிம்பேர் விருதினை’ இவருக்கு பெற்று கொடுத்தது.

• இந்த விருதுகளை தவிர, பல உலக நாடுகள் “தசாப்தத்தின் பெண் அரசியல்வாதி” மற்றும் “கோல்டன் ஸ்டார் ஆஃப் ஹானர்” போன்ற பல பட்டங்களையும், விருதுகளையும் பெற்றுள்ளார்.

• தமிழக மக்களால் அன்போடு “புரட்சித்தலைவி அம்மா” என்று அழைக்கப்படுகிறார்.

ஜெயலலிதாவை பற்றிய சில வரிகள்:

• 1948 – கர்நாடக மாநிலத்தில் மைசூர் நகரில் பிப்ரவரி 24-ஆம் தேதி பிறந்தார்.

• 1961 – “எபிஸில்” என்கிற ஆங்கிலத் திரைப்படம் மூலம் சினிமா துறையில் முதன் முதலில் அறிமுகமானார்.

• 1964 – கன்னட திரைபட துறையில் முதன்மையாக பங்கேற்றார்.

• 1965 – “வெண்ணிற ஆடை” என்கிற தமிழ் திரைப்படத்தில் முதன் முதலில் அறிமுகமானார்.

• 1972 – “பட்டிக்காடா பட்டணமா” என்கிற திரைப்படம் சிறந்த தமிழ் நடிகைக்கான “பிலிம் பேர் விருதினை” இவருக்கு வாங்கி கொடுத்தது.

• 1980 – எம்.ஜி.ஆர் தான் உருவாக்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கட்சியின் பிரச்சார செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

• 1989 – சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார்.

• 1991 – எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் முதல் தமிழக முதல்வராக பதவியேற்றார்.

• 2002 – இரண்டாவது முறையாக மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவி வைத்தார்.

• 2003 – பாரதிதாசன் பல்கலைக்கழகம் “முனைவர் டாக்டர் பட்டம்” வழங்கி கௌரவபடுத்தியது.

• 2011 – மூன்றாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

• 2015 – நான்காவது முறை தேர்தலில் வெற்றி பெற்று தமிழக மக்களால் நியமிக்கப்பட்டார்.

• 2016 – டிசம்பர் 5-ஆம் தேதி முதலமைச்சர் பதவியில் இருக்கும் பொழுதே உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

யார் இந்த ஜெயலலிதா?

ஜெ.ஜெயலலிதா அவர்கள், 1948-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி ஜெயராம் மற்றும் வேதவல்லி தம்பதியினருக்கு மகளாய் பிறந்தார். முன்னாள் தமிழக முதல்வர், அரசியல் தலைவர், பிரபல சினிமா துறையில் குறிப்பாக தென்னிந்திய திரைப்படங்களில் அதிகளவில் நடித்துள்ளார். தமிழகத்தின் முதலமைச்சராக கிட்டத்தட்ட ஆறு முறை பதவியேற்று மக்களுக்காக எண்ணற்ற நல திட்டங்களை அறிமுகப்படுத்தி உதவி செய்துள்ளார்

ஜெயலலிதா பிறந்த ஊர் எது?

ஜெயலலிதா அவர்கள் கர்நாடக மாநிலத்தில் “மைசூர் என்னும் நகரில்மாண்டியா” என்ற ஊரில் பிறந்தார்.

Read also :- தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு

Read more

Veera pandiya katta bomman history in tamil – வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கை வரலாறு

Veera pandiya katta bomman history in tamil

Veera pandiya katta bomman history in tamil – வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கை வரலாறு வீர பாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கை வரலாறு சுருக்கம் || வீரபாண்டிய …

Read more