மூலிகைச் செடிகளின் பயன்கள் – 2025 Mulikai Tree Benefits In Tamil
2025 Mulikai Tree Benefits In Tamil: தற்காலத்தில் எந்த ஒரு வியாதியாக இருந்தாலும் உடனே நாம் ஆங்கில மருத்துவத்தை தேடிச் சொல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறோம். ஆனால் நம்முடைய முன்னோர்கள் எந்தவித வியாதி வந்தாலும் அதனை மூலிகை மூலமே குணமாக்கிக் கொண்டு நீண்ட காலம் வாழ்ந்து இருக்கின்றனர் என்பதே ஒரு உண்மையான விஷயம்.
சிறு சளி, தலைவலி வந்தாலும் மாத்திரை மருந்துகளை எடுத்துக் கொள்வதற்கு பதிலாக நம் வீட்டிற்கு அருகில் இருக்கும் மூலிகை செடிகளின் வியாதிகளுக்கு ஏற்றவாறு உட்கொண்டாலே போதும் உடனடியாக சரியாகிவிடும்.
இதனால் உடல் நலமும் நீண்ட காலம் நன்றாக இருக்கும். மேலும் செலவும் குறைவாக இருக்கும்.
மூலிகை செடிகளின் பயன்களை தற்போது யாரும் அறிந்திருப்பதில்லை. இன்னொரு படி மேலாக சொல்லப்போனால், தற்போது இருக்கும் இளைஞர்களுக்கு அவர்கள் வீட்டை சுற்றி இருக்கும் செடிகளின் பெயரை கூட முழுமையாக தெரிந்து வைத்திருக்க மாட்டார்கள்.
சரி வாருங்கள் என்னென்ன மூலிகையை சாப்பிட்டால் எந்தெந்த வியாதிகளை குணப்படுத்தலாம் என்பது பற்றி முழு தகவல்களையும் பார்க்கலாம்…
தென்னை மரத்தின் பயன்கள்
- நீண்ட தூர பயணத்தின் போது சாலையின் ஓரங்களில் பார்த்தால் நிறைய இளநீர் கடை இருக்கும். ஆனால் அதிகப்படியானோர் அதனை வாங்கி குடிப்பது.
- சாதாரண இளநீர் தானே என்று நினைக்கும் இதில் எவ்வளவு நன்மை இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..!!
சரி வாருங்கள் தென்னை மரத்தில் இருக்கக்கூடிய அனைத்து நல்ல விஷயங்களையும் பார்ப்போம் :-
- இளநீர் குடிப்பதால் உடலில் உள்ள உஷ்ணம் நீங்கி வெப்ப காலங்களில் ஏற்படும் சூட்டை தணிக்கலாம். இதனால் தலைவலி ஏற்படுவதை தவிர்க்கலாம்.
- இளநீரில் வைட்டமின் பி சத்து உள்ளதால் உடலுக்கு மிகவும் நல்லது.
- தென்னை மரத்தின் இளங்குறுத்தை எடுத்து நன்றாக சுத்தம் செய்து பொடிப்பொடியாக வெட்டி அதனை சிறிதளவு ஒரு சட்டியில் போட்டு அதில் சிறிதளவு தண்ணீர் விட்டு சற்று சுண்டை காய்ச்சு, அதனை மூன்று வேலையும் சாப்பிட்டு வந்தால் நீர் சுருக்கு குணமாகும்.
- முளைத்த தேங்காயை நாம் பார்த்திருப்போம் ஆனால் அதன் உள் இருக்கும் பூவை யாரும் சாப்பிட்டிருக்க மாட்டார்கள். அந்தப் பூவை சாப்பிடுவதனால் உடலுக்கு மிகுந்த நன்மை தரும்.
செம்பை செடியின் பயன்கள் – Benifits Of Sembai Tree
பொதுவாக செம்பை செடியில் பல்வேறு வகைகள் உண்டு. இதனை பயன்படுத்துவதால் எண்ணற்ற நோய்களை குணப்படுத்தலாம். ஆனால் அவற்றை யாரும் தெரிந்து வைத்திருப்பதில்லை.
- சிறுநீர் பிரச்சனை தீர்க்கும்
- உடலில் ஏற்படும் வீக்கங்களை குறைத்து ஏதேனும் கட்டிகள் இருந்தால் அதனை கரைத்து விடும்
- நுண்ணிய கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும்
- உடலில் உள்ள ஆறாத புண்களை கூட ஆரம்பிக்கும்.
செம்பை செடி பல்வேறு வகைகளில் உள்ளது. மஞ்சள் நிறத்தில் பூக்களை பூக்கக்கூடியது ஒரு வகை சம்பை செடி. கருப்பு மலருக்குள் சிவப்பு நிறத்துடன் இருக்கும் பூக்களை பூக்கக்கூடியது மற்றொரு வகை.
மேலும் இது, அடிபட்ட காயம் வெட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் வரும்போது இந்த செடியை நன்றாக கசக்கி காயத்தின் மேல் வைத்து அழுத்தி கட்டிவிட வேண்டும். இதனால் அடிபட்ட காயம் ஆனது மிக விரைவில் குணமடையும்.
மேலும் அடிபட்டு ஆறாத புண்கள், இந்த இலையை நன்றாக கசக்கி அதன் மேலே போட்டுக் கொண்டால், அப்படியே ஒட்டிக் கொள்ளும் காயம் ஆறும் வரை அதனை அகற்றாமல் வைத்திருக்க வேண்டும்.
அந்த காயம் தானாக ஆரியுடன் அந்த இலையும் விழுந்து விடும். அதுவரையிலும் தண்ணீரோ அல்லது வெயிலிலோ அந்த இலையை கட்டிய இடத்தில் இதுவும் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
துளசி இலையை பற்றி பார்ப்போம் – Benefits Of Thulasi
- பொதுவாக துளசி இலை சாதாரணமாக அனைத்து இடங்களும் கிடைக்கக்கூடியது.
- துளசி இலையின் சாரை குடிப்பதால் எண்ணற்ற வியாதிகளை குணமாக்கலாம்.
- காய்ச்சல் இருமல் மற்றும் ஜீரணக் கோளாறுகள் ஆகியவற்றிற்கு துளசி இலை குணப்படுத்தும்.
- மேலும் ஈரல் சம்பந்தமான வியாதிகள் காது வலி ஆகிவிட்டது மிகவும் சிறந்தது.
- துளசி இலையை மென்று சாப்பிடுவதால் நம்முடைய ரத்தத்தில் உள்ள விஷத்தன்மைகளை அனைத்தையும் வெளியேற்றி, ரத்தத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும்.
பொதுவாக, துளசியில் எண்ணற்ற வகையான துளசிகள் உண்டு, ஆனால் இதில் அதிகமாக காணப்படுவது வெண் துளசியாகும். மேலும் இந்த வகையை தவிர, கற்பூர துளசி, நிலத்தளசி, முள் துளசி, நாய் துளசி, கல் துளசி, பெருந்துளசி, சிவ துளசி, ராம துளசி, கிருஷ்ண துளசி, கருந்துளசி, ஆகிய வகைகளில் துளசிகள் காணப்படுகிறது.
- காலையில் எழுந்து துளசியிலேயே சாப்பிடுவதால் வாய் துர்நாற்றம் நீங்கும். மேலும் இது உடலில் ஏற்படும் பல்வேறு நச்சுக்கிருமிகளை நீக்கும் தன்மை உடையது
- துளசியிலையை நன்றாக நீரில் ஊற வைத்து அதனை தினமும் அருந்தி வந்தால் நீரிழிவு நோய் விரைவில் குணமாகும்.
- மேலும் துளசியானது ஆஸ்துமா போன்ற வியாதிகள் மற்றும் சளி தொல்லையை முற்றிலும் குணப்படுத்தும் தன்மை உடையது. மேலும் உடலில் ஏற்படும் இருதயம் போன்ற வியாதிகளை சீராக்க துளசி பெரிதும் உதவுகிறது.
துத்தி இலையின் நன்மைகள் பற்றி பார்ப்போம்
துத்திக் கீரை பல்வேறு நோய்களை எளிமையாக குணப்படுத்தும் வல்லமை கொண்டது.
வாயு சம்பந்தப்பட்ட நோய்களை எளிமையாக குணமாக்கும். சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை வாயு தொல்லையால் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
- இதனால் இடுப்பு வலி பழைய மரத்தினால் உண்டாக்கும் பூச்சிகள் மற்றும் ஏனைய சகல வியாதிகளை இந்த துத்திக் கீரை சாப்பிடுவதன் மூலம் உடனுக்குடன் பலனை பெறலாம்.
- எலும்பு முறிவிற்கு துத்தி இலையை பயன்படுத்துவதால் உடனே குணமாக கூடிய வல்லமை கொண்டது. பெரும்பாலும் எலும்பு முறிவில் கட்டப்படும் மருந்து துத்தி இலையை கொண்டு கட்டுவார்கள்.
- மேலும் துத்து இலையானது சிறு குழந்தைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது.
- பொதுவாக குழந்தைகளுக்கு கரைப்பான் நோய் என்னும் நோய் ஏற்படுவது வழக்கம் இந்த நோயை துத்தி இலையை கொண்டு குணமாக்க முடியும்.
- முதலில் சிறிதளவு துத்தளையை எடுத்து அதனை நன்றாக காய்ச்சி என்னை போல வடிகட்டி ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு பயன்படுத்தவும்.
மூலத்தை குணமாக்க கூடிய குணம் கொண்டது துத்தி இலை
மூலம் என்பது அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு வியாதி. ஆனால் இதனை குணமாக்க எளிமையான வழிமுறைகள் உள்ளது. நான் சொல்லப் போகும் இந்த விஷயத்தை நீங்கள் கையாண்டால் மூலத்தை உடனடியாக குணமாக்கலாம்.
- முதலில் சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதனை விளக்கெண்ணெய் ஊற்றி ஒரு சட்டியில் போட்டு நன்றாக வதக்கவும்.
- இதனை ஒரு சிறிய வாழை இலை வைத்துக்கொண்டு அதனை ஒரு கோவணம் எப்படி கட்டுவோமோ அதனைப் போல ஒரு சிறிய துணியை வைத்து கட்டிக் கொள்ள வேண்டும்.
- இவ்வாறு தினமும் செய்து வந்தாலே போதும் எத்தகைய மூலமாக இருந்தாலும் உடனடியாக நீங்கி நன்மை உண்டாகும்.
- மேலும் மூல வீக்கம் வலி குத்தல் எரிச்சல் ஆகியவை இருந்தாலும் இந்த துத்தி இலையை இவ்வாறு கட்டுவதால் மிகப்பெரிய நன்மை உண்டு.
நீர்முள்ளி விதையின் பயன்கள் பற்றி பார்ப்போம்
நீர்முள்ளி விதைகள் இது அனைத்து விதமான நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கக்கூடிய ஒரு அற்புதமான மூலிகை விதைகள் ஆகும்.
நீர்முள்ளி விதைகள் பெரிதும் நீர்க்கடுப்பு ஏற்படுபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.
நம்முடைய உடலில் ஏற்படும் உஷ்ணத்தால் தான் நமக்கு நீர் கடுப்பு உண்டாகும். இது பொதுவாக இரவில் தூங்கும் போது அல்லது ஏதேனும் ஒரு பயணத்தில் இருக்கும் பொழுது நமக்கு இது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.
இது போன்ற சமயங்களில் நாம் நீர்முள்ளி விதையை சாப்பிட்டு வர நீர் கடுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
- நீர்முள்ளி விதைகள் உடலை குளிர்ச்சியாக்கி சூட்டில் இருந்து நம்மை காக்கக்கூடியது.
- உடல் சூட்டினால் உண்டாகக் கூடிய நீர் எரிச்சல் சிறுநீரகத் தொற்று நோய்கள் மற்றும் கல்லடைப்பு ஆகியோருக்கு இந்த நீர்முள்ளி விதைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
- தற்காலத்தில் உள்ள மனிதர்கள் பலதரப்பட்ட உணவுகளை சாப்பிட்டு சிறுநீர் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்வார்கள். அவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது இந்த நீர்முள்ளி விதை.
- ஆம் இது சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய கழிவுகளை நீக்கும் தன்மை கொண்டது மேலும் உடலில் ஏற்படக்கூடிய சர்க்கரையின் அளவை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டிருப்பதால் அதிகப்படியானோர் இதனை பயன்படுத்தி நன்மை அடைந்துள்ளனர்.
கருவேப்பிலையில் உள்ள நன்மைகளைப் பற்றி பார்ப்போம்
கருவேப்பிலை கருவேப்பிலை என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது கண் பார்வையை குணமாக்கி முடியை கருகருவென்று வளர வைக்கும் தன்மை கொண்டது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான்.
ஆனால் இந்த கருவேப்பிலை சாப்பிடுவதால் சீதபேதி காய்ச்சல் எரிச்சல் மற்றும் ஈரல் கோராள்கள் ஆகியவற்றை குணமாக்க வல்லமை கொண்டது.
பொதுவாக கருவேப்பிலையை நாம் பச்சையாகவும் சாப்பிடலாம் அல்லது அதனை சமைக்கும் கொழும்பில் போட்டும் சாப்பிடலாம்.
கருவேப்பிலை செடி எவ்வளவு நன்மை கொண்டதோ அதனைப் போல கருவேப்பிலை விதைகளும் மற்றும் அதன் பலன்களும் மிகுந்த நன்மை கொண்டது.
எனவே கருவேப்பிலை செடியை பச்சையாகவும் நாம் சாப்பிடலாம் இதனால் எந்த தீங்கும் நுழையாது உடலுக்கு நன்மையே ஏற்படும்.
மன உளைச்சல் நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றையும் இந்த கருவேப்பிலை குணமாக்கக் கூடியது. நம் உடலில் பித்தம் அதிகம் ஏற்பட்டால் மனிதர்கள் பைத்தியத்தை போல ஆகி விடுவார்கள்.
இது போன்ற வியாதிகளுக்கு கருவேப்பிலை கைகண்ட பலனை தரக்கூடியது.
தூதுவளை இலை உள்ள பயன்களை பற்றி பார்ப்போம்
- தூதுவளை செடி எல்லாம் சாதாரணமாக எங்கு பார்த்தாலும் கிடைக்க கூடியது.
• ஆனால் இதனை பெரிதும் யாரும் பயன்படுத்துவது கிடையாது.
• இப்போது இதன் மருத்துவ குணங்கள் மற்றும் இது என்னென்ன வியாதிகளை குணமாக்கும் என்பது பற்றி பார்ப்போம்.
- நரம்புத்தளர்ச்சி எனப்படும் கை கால் நடுக்கத்திற்கு இது மிகவும் சிறந்த ஒரு மருந்து ஆகும். சிறிது நேரம் சாப்பிடாமல் இருந்தாலோ அல்லது ஏதேனும் ஒரு சண்டையைப் பார்த்தாலோ உடம்பெல்லாம் சற்று நடுங்கத் தொடங்கும் இதுவே நடந்து தளர்ச்சி எனப்படும்.
2. நாள்பட்ட சளியை குணமாக்க உள்ளது. அதாவது பொதுவாக மழைக்காலங்களில் அல்லது நாம் வேறு எங்கும் தண்ணீர் குடித்தாலும் நமக்கு சளி தொற்று ஏற்பட்டுக் கொள்ளும் ஆனால் இதனை ஊசி அல்லது மாத்திரைகள் எத்தனை முறை போட்டாலும் சளி அதாவது நெஞ்சு சளி வந்து கொண்டே இருக்கும். இந்த இலையை பயன்படுத்துவதால் மார்பு சளியை முற்றிலுமாக நீக்கும் தன்மை கொண்டது.
3. மேலும் தோல் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளையும் குணமாக்கும் வல்லமை கொண்டது குழந்தைகளுடைய மூளை வளர்ச்சிக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்ளவும் இது போன்ற தூதுவளை இலையை சாப்பிடுவதால் மிகுந்த நன்மை தரும்.
கண்டங்கத்திரி இலையில் உள்ள நன்மைகளைப் பற்றி பார்ப்போம்
பொதுவாக நாம் வெளியில் எங்காவது பயணம் மேற்கொண்டாலோ அல்லது இரவில் தூங்கும் போது நமக்கு நீர் கடுப்பு ஏற்படும்.
மேலும் அதிக உஷ்ணத்தால் உடலில் ஏற்படக்கூடிய நீர்க்கடுப்பு ஆகியவற்றையும் இது சரி செய்யக்கூடும்.
முதலில் சிறிதளவு கண்டங்கத்திரி இலையை எடுத்து சாராகப் புரிந்து கொள்ளுங்கள் அதில் சம அளவு தேன் கலந்து ஒருவேளை சாப்பிட்டால் போதும் நீர்க்கடுப்பு குணமாகும்.
பலருக்கும் கை காலிகளில் வெடிப்பானது ஏற்பட்டிருக்கும். இது என்ன நாம் இந்த கண்டங்கத்திரி இலையை கொண்டு சரி செய்ய முடியும்.
முதலில் கண்டங்கத்திரி இலையின் சாறை பிழிந்து கொள்ளுங்கள் பின்னர் கதங்காய் எண்ணெயை அதனுடன் கலந்து கொள்ளுங்கள். இதை இரண்டையும் நன்றாக கலந்து கை கால்களில் எங்கெங்கு வெடிப்பு உள்ளதோ அந்த இடத்தில் தினமும் தடவி வந்தால் விரைவில் வெடிப்புகள் மறைந்து பூரண குணமாகும்.
மூலிகைகளைக் கொண்டு நம்மால் அனைத்து வியாதிகளையும் குணமாக்க முடியும். ஆனால் நாம் எந்த ஒரு சிறு சளி காய்ச்சல் ஏற்பட்டாலும் கூட உடனே மருத்துவமனையை தேடி ஓடுகின்றோம்.
இவ்வாறு நீங்கள் மூலிகைச் செடிகளை பயன்படுத்தி நம்முடைய உடலில் உள்ள வியாதிகளை நீக்க கற்றுக் கொண்டால், உடல் நலமும் இன்புறும் தேவையற்ற செலவு ஏற்படாது.
உங்களுக்கு தெரிந்த மருத்துவ குறிப்புகளை வருங்கால சந்ததியினருக்கு சொல்லிக் கொடுத்து விட்டு செல்லுங்கள்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து எங்களுக்கு ஆதரவு தாருங்கள்.