மகாபாரதம் பஞ்சபாண்டவர் வனவாசம்

Table of Contents

மகாபாரதம் பஞ்சபாண்டவர் வனவாசம்

மகாபாரதம் பஞ்சபாண்டவர் வனவாசம்

வினாயகர் தோத்திரம்:

மகாபாரதம் பஞ்சபாண்டவர் வனவாசம்: ஐந்துகரத்தோனே, அரனார் திருமகனே, அறுமுகற்குமூத்தவனே, ஆனைமுகப்பிள்ளையாரே, தொந்திவிநாயகரே, தொப்பைக்கணபதியே, பானைவயிற்றோனே, பழமேந்துங்கையோனே, மூல முதலே நீர் முன்னடக்கவேணுமையா.

சரஸ்வதி தோத்திரம்:

நாவிற்சரஸ்வதியே, நான்முகனார் தேவியரே, சதுர்முகனார் தேவியரே, தாயே சரஸ்வதியே, வாக்குவரமருள்வாய், மறையவனார்தேவியரே.

மகாபாரதம் தமிழ்: இந்தக்கதை சொல்வதற்கு என்கருத்தில் வாருமம்மா தப்புகளில்லாமல் தாயே நீவாக்கருள்வாய் பஞ்சவர்கள் தன்கதைக்குப் பாரதியே முன்னின்று குற்றமது வாராமல் கொண்டணைத்துக்காத்தருளும்.
கதையின் வரலாறு:
முதலாவது – சூரியன் வனம்
மகாபாரதம் பஞ்சபாண்டவர் வனவாசம்: காரானைக்கன்றே கணபதியே முன்னடவாய் ஐவராம்பாண்டவர்கள் ஆரணியம் போன பின்பு தேசத்தழகு மன்னன் துரியோ தனப்பெருமான் வனவாசம் போன பின்பு மகாராஜனென்ன செய்தான் அம்மான் சகுனியனை அருகாகத்தானழைத்து மாமன் சகுனியின் மதிமுகத்தைதான் பார்த்து மா நாகங்கொண்டதொரு மகாராஜனேது சொல்வான் சபைகள் நிறைந்திருக்க சர்ப்பக்கொடியோனுரைப்பான் ஐவர்வனவாசம்போய் ஐந்தாறுமா தமுண்டு செத்தாரோபிழைத்தாரோ சேதிதெரியவில்லை.

வனம்போனபஞ்சவர்கள் மாண்டாரெனவறியேன்
அம்மான் சகுனியை அரவத்துவசன் கேட்கையிலே மாமன் சகுனியும் மருமகனுக்கேதுரைப்பான் தூதரைப் போகவிட்டுத் தொலைதூரமேதேடி வனமாய்வனங்களிலே வனவாசம் செய்கிறதும்.

செத்ததும் பிழைத்ததுவும், சேதிஅரியுமென்றான், என்றதுகேட்டவுடன் எழுந்தானே துரியோதனன் அருகிலிருக்கும் தூதர்களை அரசமன்னன் தானழைத்து
ஐவர்வனம்போய் அநேக நாளாச்சுதே எந்தவனத்தி லிருக்கிறாரென்றறிந்து
ஐவர்கண் காணாதே அதிவிரை விலேவாரும் காற்றாய்ப்பறந்து கடுகயேவாருமென்றான் தாம்பூலம் வாங்கித் தானடந்தார்தூதுவர்கள்
கோட்டையைக் கடந்தார்கள்.

கொத்தளமுந்தாண்டினார்கள், பட்டண முந்தான கடந்து பாரவனம் போகலுற்றார் செந்நாய்புலிகரடி சீறும்வனங்கடந்தார்.வேங்கையடர்ந்தவனம் வெண்களாப் பூத்தவனம் கோங்குபெருத்தவனம் கொன்றைகள் பூத்தவனம் பாதிரிமுல்லை பருத்தவனங்கடந்து ஒருநாரைக்கிருநாரை உயர்ந்த கொம்பில் தானிருக்கும் கருநாரைக்கிரை தேடும் கதலிவனங்கடந்து சூரியன்வனந்தனிலே போய்ச்சேர்ந்தார்தூதுவர்கள்.

மகாபாரதம் தமிழ் கதை

பானசாலைக் குள்ளிருக்கும் பஞ்சவரைக் கண்டார்கள் இருக்குமிடமறிந்து ஏக நடந்தார்கள் வனமாய்வனங் கடந்து வாரார்களம் பலத்தே துரியோதனனிருக் குஞ் சிங்கா தனத்தின் முன் சாஷ்டாங்கமாகவே சரணமிட்டார் தூதுவர்கள் மகாராஜாமெச்சுகின்ற மன்னவரே நீர்கேளும் சூரியவனத் தனைவர் சுகமாயிருக்கிறார்கள் பானசாலைமேலாகப் பஞ்சவரைக்கண்டோமென்றார் அவ்வார்த்தை தான் கேட்டு அரசுமன்னனேது சொல்வான் மாமா சகுனியரே மன்னவரே நீர்கேளும், எந்தவிதம் பண்ணாலும் இறவாமற்பஞ்சவர்கள் தப்பிப்பிழைத்துமே தாரணியில் இருக்கிறார்கள் வனவா சந்தீர்ந்திங்கு வந்தார்களாமானால் பங்குப்பிரகாரம் பாதிராச்சியம் கேட்பாரே வாராமல் பஞ்சவரை வனத்திலே கொல்வதற்கு
ஆலோசனை சொலலுமையா அம்மானேயென்றுரைத்தான் மாமன் சகுனிமன்னன் மருமகனுக்கேதுரைப்பான் செல்வப்பெருமானே துரியோ தனா அஞ்சாதே ஐவரைக் கொல்ல வென்றால் ஆலோசனை சொல்லுகிறேன்.

தேவலோகத்திலிருக் குஞ்சின முற்ற துருவாசர் அவரை – வருந்தித்த பசு பண்ணால் வந்திடு வாரிப் போது வந்த பொழுதில் வணங்கிச் சரணஞ் சொல்லி அடிசி ல்சமைத்து அமுது படைத் தோமானால் போசன மிட்டுப் புகழ் வேந்தே பொற்பதத்தில் சரணமடைந்தால் சந்தோஷங் கொண்டிடுவார் துர்வாசர் தன் மகிமை சொல்லி முடியாது.

தேவராலாகாது ஜெயிக்க முடியாது ஆராலுமாகாது அந்தரிஷியை ஜெயிக்க அப்படிப் பட்டவரை அழைத்து நாமன்னமிட்டால் சந்தோஷங் கொண்டிடுவார். தவத்தால் பெரியவரும் ஐவரைக் கொல்வதற்கு அவரை மனுக் கேட்டால்
நல்லதென்று சொன்னால் நாடு நமதாகும், ஆராலேயாகும்.

ஐவரைக் கொல்ல வென்றால் என்று சொல்லக் கேட்டு இராஜன்துரியோதனனும் உள்ளங்குளிர்ந்து உடனே கத்தானெழுந்தான். அங்கொருவர் தானறியா தரவக் கொடியோனடந்தான் முத்து மிதியடியைத் தொட்டுந டந்தசைந் தான் பூங்காவனம் புகுந்து புதுகங்கை நீராடி, ஸ்நானங்கள் செய்து, சபதபம் தான் முடித்து, நினைந்து சிவனை நெற்றியில் நீறணிந்து அரகராவென்று சொல்லி அணிந்தான்.

திருநீறு ஜலந்தன்னைக் கொண்டு நிலந்தன்னைச் சுத்தி செய்து
தர்ப்பாசனம் போட்டுத் துரியோதன ராஜன்
துர்வாச மாமுனிவர் அருகுவரத் தானினைந்து
கண்ணிரண்டும் மூடித் கருத்தில் நினைத்தானே
அருந்தபசு பண்ணினானே. அரவக்கொடியோனும்,
அப்போது அந்தமுனியரு ஞான திருஷ்டியினால்
சர்ப்பக் கொடியோன் தவசு நிலையறிந்து;

சந்தோஷமாகித் தான் வருவார் அந்தரிஷி சடையுஞ் சடைமுடியுந் தம்பிரானைப் போல கையில் கமண்டலமுங் காவியுடையணிந்து தண்டுகமண்டலமுந் திருநீற்றுக் கோபியுடன் வருகிறாரந் தரிஷி வானுலகந்தான் கடந்து வனமாய்வனங் கடந்து வழிமலையுந்தான் கடந்து துரியோ தன்னருகில் தூயமுனிவந்தார்.

மகாபாரதம் கதை

மகாபாரதம் பஞ்சபாண்டவர் வனவாசம்: கண்டவுடன் மன்னன் கடுகியே தானெழுந்து முக்காலு மன்னன் முடிவணங்கி தெண்டனிட்டு ஆண்டவரே ஐயாவே அடியேன் சரண மென்றான்
சிறந்த துர்வாச ரிஷி சித்த மகிழ்ந்தே குளிர்ந்து
என்னையழைத்தது தானேது கரும மென்றார்.
மனதில் நினைத்ததெல்லாம் மன்னாவுரையு மென்றார்.

அஞ்சிப் பயந்தவனும் அரச மன்னன் ஏது சொல்வான் அமுது படைக்க வென்று, அநேக நாளென் மனதில் எண்ணியிருந் தேன் நான். இதுவே கருமமல்லா மல் வாரும் மகாமுனியே வருவீர் அமுது செய்வீர் வருந்தியழைத்து வந்தான் மாளிகை வாசலிலே வட்ட மணைபோட்டு வந்திருமென்று சொல்லி கைக்குச் சலங் கொடுத்தான் கட்டழ கோமானும் தலை வாழையிலை போட்டுத் தண்ணீருந்தான் தெளித்தான். முக்கனியுஞ் சர்க்கரையும் முன் படைத்தான் மன்னவனும் கட்டுவரிக்க முடனே காவலுந்தான் படைத்தான். உண்ணு முண்ணு மென்றே உபசரணை பண்ணலுற்றான் அன்புடன் போஜனமும் அருந்தினாரந்தரிஷி உண்டு பசி தீர்த்தாராம் உள்ளங் குளிர்ந்தாராம்.

கையலம்பிக் கொண்டு கனி வாயுஞ்சுத்தி பண்ணி சிறந்ததோர் பீடத்திலே சேர்ந்தாரே துருவாசர் துன்னும் முடிவேந்தன் துரியோ தனராஜன் பொற்றாம் பாளந்தன்னில் புஷ்பமுஞ்சந்தனமும், தங்கத்தாம் பளந்தன்னில் தாம் பூலம் தான் கொடுத்தான் மெத்த மகிழ்ந்தாரே மேன்மைத் துருவாசரிஷி சர்ப்பக் கொடிபடைத்த தார்மன்னனைப் பார்த்து என்ன மனதிலுண்டு இஷ்டமெல்லாம் கேட்டுவிடும் மனதில் நினைத்ததொரு வரங்கள் தருவோமென்றார் என்றேயவருரைக்க ஏதுரைப்பான் துரியோ தனன் ஏதுவரந்தருவீ ரென்றுரைத்தான் துரியோதனன்.

அப்போது மாமுனியுமவ் வார்த்தைக் கேது சொல்வார் கோரும்வர மெல்லாம் கொப்பென வேதரு வேனென்றார்.

அப்போது துரியோதனன் ஆணழகனேது சொல்வான் பங்காளிப் பிள்ளைகளோ பாண்டவர்களை வருண்டு ஐவர் வன வாசம் செய்யவே போனார்கள் சூரியவனத்திலே இருக்கிறார்.

பஞ்சவர்கள் ஐவரைக் கொல்ல வென்று அநேக மனதாகி உம்மை வணங்கினேன். நான் உண்மையுள்ளமா முனியே பஞ்சவரைக் கொல்ல வென்று பண்பாகச் சொல்லுbமென்றான் எந்த வகையாலும் இறக்க வகை பண்ணு மென்றான். பாதம் பணிந்தானே பாம்புக் கொடியோனும் துருவா சமகாரிஷியுஞ் சொல்லுகிறார்.

மகாபாரதம் பஞ்சபாண்டவர் வனவாசம்: வாய்திறந்து ஏதுதானும்மைச் செய்தாரி ராஜாக்கள் பஞ்சவர்கள்
எப்படிக் கொல்வேனானி ராஜாக்கள் பஞ்சவரை துரியனது கேட்டு சொல்லு வான் வாய் திறந்து ஆரண்யந்தனில் ஐவரருகிற்vசென்று ‘போ ஜனங்கேட்டாலே’ புகழ்வேந்தர் பஞ்சவரை ஐவருக்கே போஜனமும் அங்கே கிடையாது. வெந்த சோறுண்டு வித மறியார் பஞ்சவர்கள் போஜனமில்லை யென்றால் பொட்டென வே சாபமிட்டு கல்லா கமண்ணாகக் காவலரைச் செய்து விட்டு கடுகத் திரும்பி விடும் கனத்தரிஷியாரே,போய்வாருமென்றுசொல்லி பொருந்த வேதெண்டனிட்டான்.

துருவா சமகாரிஷி யுஞ் சுருக்காகவே யெழுந்து தண்டுக மண்டலமும் தருப்புலித் தோலாசனமும் கடுகிநடந்தாரே காடுசெடி தாண்டி
அஸ்தினா புரந்தாண்டி ஆறுசுனை தாண்டி காடு செடி தாண்டி கரியமலை தான் தாண்டி சில்லென்று பூத்த செடியும் வனாந்திரமும், தோளிற் செடமாலை சோரவிட நாளாச்சே பாவிகெடுத்தானே.

பஞ்சவரைக் கொல்ல வென்று என்றும் பகையாளி ஏற்பட்டான் பஞ்சவர்க்கு இங்கேயிருந்தோ மென்றால் இறந்திடுவார். பஞ்சவர்கள் நம்பினோ மென்றவரை நாமல்லோ காக்க வேணும், கடுகி வருகின்றார். கனத்தரிஷிய வரும் ஏழுலகையாண்ட எம்பெருமாளிதையறிந்தார்.

அடியளந்தமாயவனார், ஆதி மூல மேது செய்தார் நம்பினோரைக் காக்கும் நாராயணரெழுந்து, காவலர்பஞ்சவர்க்கு கனமோசம் வந்ததென்று ஐவராம் பாண்டவர்க்கு அனர்த்தம் வருமென்று செல்வத் திரவியங்கள் சீரழிந்து போகுமென்று என்று எழுந்தாரே.

எம்பெருமாள் மாயவரும் துவாரகா புரி தாண்டி துழாய் மௌலி தாம் வாரார். காடு செடி தாண்டி கரிய மலை தான் தாண்டி சிறந்த துருவாசருடன், சேர்ந்தாரே எம் பெருமாள் ஆலிங்கனஞ் செய்தார்.

ஆயர்பெருமாளும் இந்த வனத்துக்கு ஏது வகையாய்ப் போகிறீர் எங்கே நீர் போகின்றீர் என்றார் பெருமாளும், மகாரிஷி துருவாசர் வாய் திறந்தேது சொல்வார். மாயன் பெருமாளே வந்ததென்ன இவ்வனத்தே பார்வேட்டை யாகவே பாரவனங்கள் வந்தேன்.

வனசாரியாகவே வந்தேன் காணிவ்வனத்தே அவ்வார்த்தை தான் கேட்டு அந்தரிஷியேது சொல்வார். பஞ்சவர்கள் தாமிருக்கும் பாரவனங்களிலே ஐவரிருக்கு மந்த அடவியிலே போய்ச்bசேர்ந்து புண்ணியர் ஐவரையும் போஜனங் கேட்க வந்தேன் என்றுசொல்லக்கேட்டு எம்பெருமாளானவரும் நாமும் வருகிறோம் நம்மன்னரைப் பார்க்க, கூடநடந்தாரே கோபாலசுவாமியவர்
இருவருமாகயிருண்டவனந் தாண்டி ஓங்கி வளர்ந்த தொரு மூங்கில் வனந்தாண்டி.

செந்நாய், புலி, கரடி, சீறும் வனந்தாண்டி பாதிரி முல்லை பருத்தவனந் தாண்டி ஒரு நாரைக் கிருநாரை, வுயர் கொம்பிலேயிருக்கும் கருநாரைக் கிரை தேடுங் கதலி வனந்தாண்டி. கடுகி வருகையிலே கரிய மாலென்ன செய்தார். பலா மரத்தைக்க ண்டதும் பாரளந்தாரேது சொல்வார் மெத்தப்bபெரியவரே வேண தவஞ்bசெய்தவரே இந்தப்bபலா இலை தான் ஏதுக்கு தவு மென்றார்.

அவ்வார்த்தை கேட்டவுடன் அரியரிஷியேது சொல்வார், இந்தப் பலா இலையிலினிய போஜன முண்டால் பலா இலையில் போஜனத்தைப் பண்ணவர்க்கு இட்டாலே அமரர்க்கு அற்புதங்காண் ஆர்க்குங் கிடையாது.

எல்லோர்க்குங் கிட்டாது இராமரேயென்று சொன்னார் உச்சிதங்கள் தான்கேட்டு உவந்து நடக்கையிலே அந்தவனங் கடந்து அடுத்த வனம் போகையிலே காமதேனுப் பாலை கருங்கல்லுப் பாறையிலே கறந்தேயிருக்கிறதை கண்டார் பெருமாளும், மாயன் பெருமாளும், வார்த்தையவர்க் கேதுரைப்பார் மெத்தப் பெரியவரே வேண தவஞ் செய் கவரே தூயதவத்திற் சிறந்த துருவாசமா முனியே காமதேனுவின் பாலுங் காரியத்துக்காகு மோதான் இது-ஏதுக்கு தவுங் காணென்றார் பெருமாளும் அவ்வார்த்தைதான்கேட்டு அந்தமுனியேது சொல்வார்.

தெய்வலோகந் தனிலே தேவருக்குங் கிட்டாது, ஆர்க்குங் கிடையாது,
அமரருக்குங் கிடையாது, இது எடுத்துப் புசித்தாலே ஈசுவரர்க்கும் அற்புதங் காண் என்றுbசொன்ன வார்த்தை எம் பெருமாள் தான் கேட்டு சந்தோஷப்bபட்டுக் கொண்டே சுவாமி நடந்தாரே அடுத்தவனத்திலே, அவரிருவர் போகையிலே, தாமரைத் தடாகத்தையும் சுவாமி கண்டேது சொல்வார்.

ஐயா பெரியவரே அமரர்க்கரி தானவரே இந்த ஜலந்தானும் ஏதுக்கு ஆகுமென்றார். துருவா சமகாரிஷியும் சொல்லுகிறார் பொட்டெனவே தாமரைப் பொய்கையிலே ஸ்நானங்கள் செய்தாலும் சபதபங்கள் செய்து தாகத்துக் குண்டாலும் சிவனேயவனாகும் செப்பமுடியாது என்று சொன்ன வார்த்தை எம்பெருமாள் தான் கேட்டு சந்தோஷப்பட்டுக்கொண்டே சுவாமி நடந்தாராம் இருவருமாகவே இணைந்து நடந்தாராம்.

சூரியவனத்திலே சேர்ந்தாரிரு வருமாய் பர்ன சாலை மேலிருந்த பாண்டவர்கள் கண்டுவிட்டார். மாயன் பெருமாளும் மாமுனியானவரும் வருகிறாரென்றந்த மகாராஜர் தானெழுந்து, திடுக்கிட்டுத் தான் பதைத்து சீக்கிரமாய் தானெழுந்து எதிர்கொண்டு ஓடிவந்து இறங்கியே தெண்டனிட்டார்.

மகாபாரதம் – பஞ்சபாண்டவர் வனவாசம்:

மகாபாரதம் பஞ்சபாண்டவர் வனவாசம்: சாஷ்டாங்கமாகவே சரண மென்று தெண்டனிட்டார் கடுகிமுடுகியே காட்டுத்தழை யொடித்து ஐந்தடுக்கு மெத்தையாக ஆசனம் போட்டார்கள். இட்ட தோராசனத்தில் ஏறியிருவருமாய் பச்சிலைமெத்தையிலே பதியக்கொலுவிருந்தார். தக்கப்புகழுடைய தருமரவர் கூறுகின்றார். துரியோதனன் செய்த சூதுகளைக் கேட்டீரோ நாடோடிருந்த வென்னை நம்பவே தானழைத்து விருந்தருந்த வாருமென்று விருந்தோலை தானனுப்பி வருந்தி யெனையழைத்து வஞ்சனைகள் செய்தானே கொல்ல நினைத்தானே குருடன் மகன் சத்ராதி வருகிற வழி தனிலே வசிகளைத் தான் புதைத்தான் அதற்கும் பிழைத்தோமே, ஆயரது புண்ணியத்தால் வசநாவி நீர்பந்தல் வழியில் வைத்தான் மா பாவி அதற்கும் பிழைத்தோமே, ஆண்டவரே உம்மருளால் பொய்குழி வெட்டியே பொற்சிங்காதனங்களிட்டு கொல்ல நினைத்தானே குடிகேடன் மாபாவி அதற்கும் பிழைத்தோமே ஆயரது புண்ணியத்தால் எண்ணெயிட்டுக் கொள்ளுமென்று, எங்களைத் தானழைத் கொல்ல நினைத்தானே, குடிகேடன் மாபாவி அதற்கும் பிழைத்தோமே ஆயரது புண்ணியத்தால் கொல்ல நினைத்தானே குடிகேடன்சத்ராதி அதற்கும் பிழைத்தோமே, ஆண்டவரே உம்மருளால் அரசர்சபை நடுவே அம்பலத்தார் தங்கள்முன்னே சொக்கட்டான் போட்டான்காண் சோழிவிளையாடி பகடசாலைப்போட்டு பந்தயங்கள் பேசினானே நாடுகளும் சீமைகளும் நகரமுர் பேசினானே அரசும் பறித்தானே அதிகாரமும் பறித்தான் பெரிய விலங்குமிட்டுப் பெருங்கிடங்கிலேயடைத்தான்.

நீரிற்கழுநாட்டி நீராட வாரு மென்றான் குளத்தில் வசி நாட்டி குளித்திடப்போங்க ளென்றான். அதற்கும் பிழைத்தோமே அரிராமர் புண்ணியத்தால் உண்ணுகிற சாதத்திலே ஒப்பியே நஞ்சையிட்டான் குடிக்கிறதண்ணீரில் கொலைகாரன் நஞ்சையிட்டான், கொல்ல நினைத்தானே குடிகேடன் சத்ராதி அதற்கும் பிழைத்தோமே ஆண்டவரே உம்மருளால் அரசர்சபை நடுவே அம்பலத்தார் தங்கள் முன்னே சொக்கட்டான் போட்டான் காண் சோழி விளையாடி பகட சாலைப்போட்டு பந்தயங்கள் பேசினானே நாடுகளும் சீமைகளும் நகரமும் பேசினானே
அரசும் பறித்தானே அதிகாரமும் பறித்தான் பெரிய விலங்குமிட்டுப் பெருங்கிடங்கிலேயடைத்தான்.

காற்று நுழையாத கல்லறைக் கிடங்கி லிட்டான் அரசர் சபை நடுவே அம்பலத்தார் தங்கள் முன்னே அறையிலிருந்த பெண்ணை அம்பலத்திற் கொண்டு வந்து பாஞ்சாலன் பெற்ற பெண்ணைப் பாவை போலழகியை அரசர் சபை நடுவே அம்பல மேற்றி வைத்தான். சொல்லா துஞ் சொல்லியவன் துகிலுரிந் தான் மாபாவி வாய் வரிசையில்லாமல் வம்பாகப் பேசினானே. பாரவன வாசம் பன்னிரண்டு வருஷ மட்டும் ஆரணியம் போயிருந்து அப்பாலொரு வருடம் அஞ்ஞாத வாசம் செய்து அப்பாலே வந்தாக்கால் காடு திரிந்து வந்தால் காவல்நகர் தாரே னென்றான் பங்குள்ள பிரகாரம் பாதி நாடு தாரேனென்றான் பாரவனவாசம் பரதேசம்வந்துவிட்டோம்.

மகாபாரதம் கதை தமிழ்பஞ்சபாண்டவர் வனவாசம் காரானைக்கன்றே கணபதியே முன்னடவாய் ஐவராம்பாண்டவர்கள் ஆரணியம் போன பின்பு தேசத்தழகு மன்னன் துரியோ தனப்பெருமான் வனவாசம் போன பின்பு மகாராஜனென்ன எங்கள் பொழுது தொலையு மோ பூமியரசாளுவமோ என்று தொலையுமோ எக்காலம் சென்றிடுமோ நாங்கள் சுகமாக நாட்டினையாளுவமோ எங்கள் விதிவசமும் எப்படியோ நாமறியோம். பாதஞ் சரண மென்று பணிந்தாரே தருமராஜன் மாயன் பெருமாளும் வாய் திறந்தேது சொல்வார். தலையிலெழுதினதை தள்ளி வைப்பாரொரு வருண்டோ வரும் வினை வந்தாக் கால் மடியேந்த வேண்டாமோ ஈசனெழுதினதில் எள்ளளவுங் குறையாது என்று பிரியவசனத்தைப் பெருமாளுரைத்தாரே தக்கப் புகழுடைய தருமரவரேது சொல்வார்.

இந்தரிஷியாரும் ஏது வகையாக வந்தார் என்று மவர் கேட்க ஏது சொல்வார் மாயவரும் வந்தவருத்தமதை மாயவரும் கேளுமென்றார் என்று சொல்லக்கேட்டு இயலான தருமராஜன் துருவாச மாமுனிக்குத் தோத்திரம்செய்வித்து சொல்லுவார் வாய் திறந்து தூய தருமராஜன் அடியேனைத் தேடியே ஆண்டவரே வந்ததென்ன கமல பதம் நொந்திடவே கால் நடையாய் வந்தீரே செந்தாமரைப் பாதம் செம்புண்ணாய்ச் சிவந்ததுவோ தேடி வந்த காரியத்தைச் செப்பு மென்றார் மாமுனியை துருவாச மாமுனியும், சொல்லுமென்றார்.

வாய்திறந்து குருகுலவம்சத்தில் குந்தியார் புத்திரரே போஜனங்கள் கேட்கவந்தேன் புகழ் பெரிய தருமரே நான் தேவருக்கு மற்புதமாய் சிவனார்க்கும் பிரீதியாக இப்போது போஜனங்களிட்டாலேயல்லாது கல்லாய்ச் சபிப்பேனென்றார் கனத்தரிஷியாரும் மெத்தப்பயந்தாரே வில்வேந்தர் தருமராயர்,
ஆயரைப் பார்த்துமல்லோ அதிக விசாரமிட்டார் மடிந்து விடுங்காலம் வந்கதேயென்ன செய்வோம் என்று புலம்பகையில் எம்பெருமாளேது சொல்வார் வீமாமதகரியே வேல்வேந்கே வாருமென்றார்.

மகாபாரதம் பஞ்சபாண்டவர் வனவாசம்: பருத்தவனங்களிலே பலா இலை நீ பறித்து கருங் கல்லின் மேலாகக் காமதேனு பாலிருக்கும் காராம் பசும் பாலை கடுகியே பேர்த்தெடுத்து தாமரைப்பொய்கையிலே சலங் கொண்டு வா வென்றார் என்று சொல்ல மாயன் எழுந்து நடந்தான் வீமன் கடுகிமுடுகியே காற்றாய்ப் பறந்து வந்து காமதேனின் பாலையவன் கடுகியே பேர்த் தெடுத்து பருத்தவனங்களிலே பலாயிலை தான் பறித்து தாமரைப்பொய்கையிலே சலங் கொண்டு ஒடி வந்து துருவாசமா முனியே சுவாமி யெழுந்தருளும் கைக்குச்சலங் கொடுத்துக் கடுகவே தருமராஜர் வட்ட மணைபோட்டு வந்த மருஞ்சுவாமியென்று பலா இலையில் போஜனத்தைப் பாங்காய்ப் படைத்தார்கள்.

உபசாரம்பண்ணியே உண்ணுமையா சுவாமியென்றார் போஜனத்தை மாமுனியும் புசித்துப் பிறகாக ஆயாசந்தீர்ந்தாரே அந்தரிக்ஷியாரும் கையலம்பிக் கொண்டாராம், களமகிழ்வு கொண்டாராம், தாம்பூலமும், வாங்கிச் சந்தன முந்தானணிந்து ஐவரைக் கொல்ல வந்த அந்த துருவாசரிஷி தேவர்களருந்துகிற திவ்விய போஜனத்தை போதப் படைத்தார்கள். புகழ் வேந்தர் பஞ்சவர்கள் இப்படிப்பட்டவரை எப்படிக் கொன்றிடலாம் என்று மன மகிழ்ந்து இராசரைவாழ்த்தினார்.

ஐவராம் பாண்டவரை அந்தரிஷி வாழ்த்தினார் ஐவரையும் வாழ்க்தி ஆயரைத் தெண்டனிட்டார். இருங்களிருங்களென்று எழுந்து நடந்தாரே கடுகி முடுகியே கரியமலை தான்தாண்டி சூரியவனந் தாண்டியே சுருக்காக வருகிறாராம் காடுகள் தாண்டியே கரியமலை தான்தாண்டி அஸ்தினாபுரத்தை அடுத்தாரா மந்தரிஷி துரியோதனனிருக்கும் துலங்கு சபை தன்னில் வந்தார் துரியோதன ராஜன் சுருக்காகத்தானெழுந்து அடிபணிந்து தெண்டனிட்டு ஐயா சரண மென்றான் சிங்கா தனம் போட்டுச் சிறப்பாக வீற்றிரென்றான் ஆசனத்தின்மேலாக அந்த முனி வீற்றிருந்தார் தூய முடிவேந்தன் துரியோ தனன் கேட்பான் ஐவரையுங் கொன்று அதம் பண்ணிப் போட்டீரோ என்று பல கேட்டானே இதயம் கல்லான மன்னன் துருவாச முனிவர் தோஷி மொழி கொள்ளாமல் கோபம் மிகக் கொண்டு கொப்பெனவேயேது சொல்வார்.

பஞ்சபாண்டவர் வனவாசம் – மகாபாரதம் கதை:

ஐவர் போலு பசாணை ஆருமே செய்ததில்லை. தேவர்கள் தானருந்தும் திவ்விய போஜனங்கள் போதப் படைத்தார்கள் பொன்னடியைத் தான் வணங்கி
கல்லாய் சபித்தீரோ கடுகியே வந்தீரோ ஐவரையுங் கொல்லென்று அனுப்பினாய் பாதகனே சரணமடைந்தார்கள்.

சந்தோஷமாகி வந்தேன் ஐவரையுங் கொல்லென்று அனுப்பினாய் பாதகனே உன்னுடை வம்சத்தில் ஒன்றும் விளங்காது ஐவர துகையாலே அனர்த்தமாய்ப் போக வென்று சாபங் கொடுத்தாரே சமர்த்துள்ள மாமுனியும் செப்பி நடந்தாரே தெவ்வலோகந்தனிலே, துருவாச மாமுனியும், தெய்வலோகந்தன்னிலே அப்போது துரியோதனன் அங்கேவிசன முற்று எண்ணாத எண்ணமெண்ணி இருந்தான் துயரத்துடன் ஐவருக்காகவே ஆயரிருக்கும் போது மாயன் பெருமாளும வார்த்தைகளேது சொல்வார்.

துய்ய முடிவேந்தன் துரியோ தனமன்னவனும் தூயமனமுடைய துருவாச மாமுனியும் அரவக் கொடியோனும் அனுப்பினானும்மைக் கொல்ல துரியோதனன் சொற்படி துருவாச மாமுனியும் உம்மை – கொல்ல மனதாகிக் கோபித்து வந்தாரே அதை யறிந்துங்களை நான் ஆதரிக்க இங்கே வந்தேன் என்றுரைக்கமாயவரும் ஏதுரைப்பார் தருமருமே உம்மை நம்பியல்லோ உயிர் கொண்டுலாவுகிறோம்.

நீரேதுணையல்லால் வேறுதுணையு முண்டோ
அடியாரைக் காக்கின்ற ஆதிபரம் பொருளே ஏழைகளைக் காக்கின்ற எம்பெருமாளாண்டவரே பன்னிரண்டு வருடம் பாரவனந்திரியு மட்டும் ஏது வினைவருமோ ஐயா எம்பெருமாள் நானறியேன் இன்ன மென்ன வஞ்சனையோ எம்பெருமாள் நானறியேன் வரும் வினையாவுக்கும் மாயவரே துணைவாரும் அரக்கு மாளிகையில ஐவரைக்காத்தீரே, அபயமென்றதுரோ பதைக்கு அட்சயத்துகில் கொடுத்தீர்.

உன்மகிமையாரறிவார் உலகளந்தமாயவரே, சரணஞ் சரண மென்று தாள் பணிந்தார் பஞ்சவர்கள். சாஷ்டாங்கமாகவே சரண மிட்டார் பஞ்சவர்கள் மாயன் பெருமாளும், மனது மிகக் குளிர்ந்து ஐவர்கள் மேல் பின்னும் அதிகப் பிரியமுடன், சந்தோஷப்பட்டு மாயன் சாலமனங் குளிர்ந்தார்.

மகாபாரதம் பஞ்சபாண்டவர் வனவாசம்:  மாயன்பெருமாளும் வார்த்தைகளேது சொல்வார் இந்த வனந்தாண்டி இனியவனம் போங்களென்றார் மற்றொருவனத்திலே தான் மன்னவரே போங்களென்றார் அடுத்தவனந்தனிலே ஐவரும் போய்வா சம்பண்ணார் தெற்கு, மேற்கு, கிழக்கு, சேனதூரஞ்சென்றாலும் வடக்குதிசையிலே தான் மன்னவரே போக வேண்டாம் ஏதுவினைவந்தாலும் என்னை நினைத்திடுங்கள் என்றேமுடித்துசொல்லி எம்பெருமாள் தானெழுந்தார். வட்டமிடுங்கருடனேறி மாயவரும் போனாரே காடு, செடி, தாணடி கரியமலை தான் தாண்டி அழகானதுவாரகைக்கு ஆண்டவரும்போய் நடந்தார்

முதலாவது சூரியன் வனம் முற்றிற்று.

(இரண்டாவது பகுதியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்)

(மேலும்: மகாபாரதத்தை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள Wikipedia – வை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்)

 

Leave a Comment