மகாபாரதம்

மகாபாரதம் கதை தமிழ் || பஞ்சபாண்டவர் வனவாசம் பகுதி – 2

Post views : [jp_post_view]

இரண்டாவது-இராமரிஷி வனம்

மகாபாரதம் கதை தமிழ்
மகாபாரதம்

(முதல் பகுதியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்)

மகாபாரதம் கதை தமிழ் – Mahaparatham Tamil இரண்டாவது வருஷம் பிறந்தது பஞ்சவர்க்கு அந்த வனந்தாண்டி அப்பாலே போகலுற்றார். இராம ரிஷி வனத்தில் ஏகினார். பஞ்சவர்கள் கூடை தலை மேலே குடி வாழ்க்கை கானகத்தில் முன்னை முகட்டையும் முகிழ் விரித்து தூதுவளை பண்ணைக் கலவையும் பறட்டைப்புளிக்கரணை தின்று திரிகிறார்கள். தேசந்திரிவார் போல் ஐந்தடுக்குப் பர்னசாலை அவ்வனத்திலுண்டு பண்ணார் ஏழடுக்குப் பர்னசாலை எழிலாக உண்டு பண்ணார் பானசாலை மேலாகப் பஞ்சவர்கள் வீற்றிருந்தார்.

அந்த வனத்திலே ஐவர் வனவாசஞ் செய்தார். அந்த வனந்தனிலே அழகான இராமரிஷி தவசிற் பெரியவரும் தமபிரானான வரும்
சரணங்கள் பண்ணினாலே சாதங்கறியிடுவார்.போஜனமிட்ட பின்பு புஷ்பங்கள் தான் கொடுப்பார். புலித்தோலுமாசனமும் பொருந்தவே தான் கொடுப்பார் சரணமடைந்து சாமியேபோய் வாருமென்பார்.

தாதர் பெரியவர்கள் தப்படித்து வந்தாலும் அரிராமா வென்று சொல்லி அனந்தம் பேர் வந்தாலும், இராமா வென்ற சத்தம் இராமரிஷி கேட்டாலும், அரிகரி வென்ற சத்தம் அந்த ரிஷி கேட்டாலும், கோவிந்தா வென்ற சத்தம் குருமுனி கேட்டாலும், கோபித்துக் கண் சிவந்து கொப்பென வேதானெழுந்து
பஞ்சபாண சீறிவரும் புலி போல் சிவ்வென வேதானெழுந்து கையில் தடியெடுத்துக் கடுகியடிப்பானே வாரியெடுத்துமவர்.

வல்லுயிரைக் கொள்ளை கொள்வான் அப்படியாகவே அநேக நாளிருக்கும் போது மாயன் பெருமாளும் வார்த்தையது வறிந்து தள்ளாடுங் கிழவனைப் போல் தானே வடிவெடுத்தார். இராமரிஷியிருக்கும் இனிய வனந்தனிலே தாதனொரு வனையுந்தடியாலடிக் கலுற்றான், சுழற்றியடி த்தானே சுவாமி யென்றறியாமல் அவ்வடியும் பட்டவுடன் அரிராமர் கோபமாகி கண்கள் சிவந்துமல்லோ காந்தாளமு மெழுப்பி மெத்தப் பயமாகி விஷ்ணு வைத்தான் பணிந்து பரந்தமுகம் நிறைந்த பழுத்த மரம் போலே தா தவடிவாக சுவாமிவருவாராம்.

மகாபாரதம் கதை:

அந்த ரிஷியிருக்கும் ஆச்சிரம முட் புகுந்து ஹரி ஓம் ஹரி ஓ மென்று அடித்தாராம் தப்பதனை சாரங்க பாணியென்று சங்குதனைத் தானூதினார்.

அந்தச் சத்தந்தான் கேட்டு அரியரிஷி தானெழுந்து கோபித்துக் கண் சிவந்து கொப்பென வேதானெழுந்து யானையின் மேலே தான் ஆண் சிங்கம் புகுந்தாப் போல் மாறியடித் தானே மகத்தான இராமரிஷி அந்த அடிபட்டுக் கொண்டு அரிகரி இராமா வென்றார்.

மறு காலொரு தரமும் மாறினான் இராமரிஷி அவ்வடியும் பட்டுக் கொண்டு அரிகரி இராமாவென்றார். அவன் மாறியடித் தானே மாயனென்றறியாமல், ஆகாயமாகவே ஆயர் வளர்ந்தாரே விசுவரூபமாகவே மேகவர்ணர் தாம் வளர்ந்தார். கண்டானே இராமரிஷி கால்கை தடுமாறி அடித் தொடையுங்காலும், அதிக விட விடென்ன மெத்தப் பயத்து விழுந்தானடி பணிந்தான். சுவாமி சரண மென்று தாள்பணிந்தான். இராமரிஷி முக்காலுந் தெண்டனிட்டு முடி வணங்கி போற்றி செய்தான்.

அப்போது மாயவரும் அருளாளரேது சொல்வார். மாயன் பெருமாளும் வார்த்தைகளேது சொல்வார் போஜனங்கள் போடுவதும் போதப் பணிவதும், மயே சுவரடியார்க்கு வணங்குவது யல்லாது என்றனடியாரை இகழ்ச்சியாய் பேசுவதும் மாறியடித்துமே வாயத்தம் பண்ணுவதும், அகந்தைகள் பண்ணுவதும், ஆகுமோ இராமரிஷி ஆகாதகாரியங்கள் அனர்த்தங்கள் தேடிக் கொண்டீர் இவ்வார்த்தை கேட்டுமே இயலானராமரிஷி கை கட்டி, வாய் புதைத்து, கடுகியே ஏது சொல்வான்.

ஆதிசிவன் பாதம் அடியேனறிந்திருப்பேன் உம்முடைய பாதத்தை ஒருக்காலும் நானறியேன். தேடியுங் காணாததால் தேவரீரும் பாதம் ஆண்டவரேயுமைக்காண அநேக நாள் தவமிருந்தேன். கோரித் தவமிருந்தும் கோவிந்தா கண்டதில்லை ஆகையினாலே தான் ஆயர்வுமை காண உம்முடைய அடியாரை உதாசீனம் பண்ணுவது இந்த விதமாக இருந்தேன். நெடுநாளாய் வினையகன்ற தின்று எம் பெருமாளும்மாலே பாத மதைக் கண்ட போதே பாவங்கள் போக்கிவிட்டேன்.

அஞ்சிப் பயந்தவனும், ஆசாரம் பண்ணினான் காயாம் பூவண்ணருமே, கரியமாலேது சொல்வார். அகந்தைகள் செய்ததினால் அநேக பாவ முன்றனுக்கு சாபம் பிடியுமென்றார். சௌரி பெருமாளும், ஆயிரம் வருஷம் மட்டும் அரவமாய் போக வென்றார். எம்பெருமாளிச் சாபமெப் போது தீரு மென்றார். அப்போது மாயவரும் அருளாளர் ஏது சொல்வார், ஐவராம் பாண்டவர்கள் ஆரணியம் வருகிறார்கள்.

மகாபாரதம் கதை தமிழ்:

வன வாசம்வ ருகிறார்கள். மன்னர் பஞ்ச பாண்டவர்கள் தருமர், தம்பி நால்வோரைத் தாமெடுத்து விழுங்கிடுவீர். வெற்றி மத யானை வீமனர்ச்சுனரை, நகுலர், சகாதேவர் நரபாலர் நால்வரையும், எடுத்து விழுங்கியே இருக்கின்ற வேளையிலே அர்ச்சுனன் வில்லாலுன் அங்கம் பிளந்து விடும்.

அந்தச் சமயத்தில் அங்கே நான் வந்திருப்பேன். நான் வந்துனக்கு நற்காட்சி தருவேனென்றார். அப்போது இராமரிஷி ஆயரிட்ட சாபத்தினால் அரிராமசாபத்திலே அப்பாம்பு முண்டாச்சு அநேக நாளாய்ப் பாம்பா யவ் வனத்திலேயிருக்கும். அதையறியார் பஞ்சவர்கள் அவ்வனத்திலேயிருந்தார். இராமரிஷிவனத்தில் ராஜாக்கள் தானிருந்தார். பர்ன சாலையுண்டு பண்ணிப் பஞ்சவர்களங்கிருந்தார். காயும் பழங்களும் கந்த மூலங்களுண்டு ஐவருமங்கேயே ஆலித்திருக்கும் போது தெற்கு, மேற்குக், கிழக்குத் தேடிகனிபறிப்பார். வடக்குதிசை நோக்கி மன்னவர்கள் போவதில்லை.

அவ்வனத்திலே யொரு நாள் அடங்கா தவீமனவன் மெத்த வகங்காரமுடன், வீமனுமங்கே நினைவாய் கடுகியெழுந்திருந்தான். கனிகள் பறிக்க வென்று வடக்குதிசை தனில் மாயன் போகாதேயென்றார்.
காயுங்கனியு மங்கே கடுகியே கிட்டாதோ வேண்டிய ராட்சதர்கள் வேத முனிகளுண்டோ அவ்விடத்தில அதிசயங்களெல்லா மறிவோ மென்று கடுகியெழுந்திருந்தான்.

கட்டழகன் வீமனவன் சல்லடங்கள் போட்டு பின் தட்டி வரிந்து கட்டி தட்டிவரிந்து கட்டி தாமரைப் பூச்சுங்கு விட்டு கையில் கதையெடுத்துக் மடுகியே தானடந் தான் வடக்கு திசை நோக்கி வாரான். மதகரியான் காயுங்கனியு மங்கே கடுப் பழுத்திருக்கும், அவ்விடத்திலே கனியும் அநேகம் பழுத்திருக்கும்,
அறு நெல்லி, சிறு நெல்லி அழகான தமர்த்தைகளும் கொச்சித்த மர்த்தையுடன் குடகு பலாப் பழமும், மாங்கனியுந், தேங்கனியும் வண்ணப் பலாப்பழமும், மட்டில்லாப் பழங்களெல்லாம் வனத்தில் சொரிந்திருக்கும். அளவில்லாக் கனிகளெல்லாம் அவ்வனத்தில் தா மிருக்கும் கண்டானே வீமனவன் கண்கள் மிகக் குளிர்ந்தான். பார்த்தானே வீமனவன் பார்வையிரண்டும் குளிர்ந்தான் மெத்தக் கனிகளிங்கே வேணதெல்லாந்தாமிருக்க, உண்டு பிழைப் பார்க ளென்றல் லோவுலகளந்தார் தின்று பிழைப்பார்க ளென்று திருமாலும் வடக்குதிசை போகாதே யென்றாரேமாய வரும் சுவாமி பெருமாளவர் சதி நினைக்கக் கண்டேன் என்று மனதிலெண்ணி ஏங்கி நடந்தானே.

எண்ணாது மெண்ணினான் இயலான வீமனவன் அந்தவனத்தி லவனாகவுள் நுழைந்து மரத்தின் மேலேறினானே. மதவீமரா ஜனவன் உச்சியிற் கனி பரித்து உண்டு பசி தீர்த்தான். காண் காயுங் கனி பறித்து கடுகவே தான், புசித்தான், வாயாரத்தின்றுமே வயிறாரத்தான். புசித்தான் அண்ணற்குந் தம்பியற்கும் அனேகங்கனி பறிக்க அரு நெல்லி, சிறுநெல்லி, அழகான தமர்த்தையுடன், சோலைப் பலாக்கனியும் தூய விளாங்கனியும், கிளையை வளைப்பானாங் கிள்ளி யொரு பழம் பறிப்பானாம்.

செடியை வளைப்பானாம், சிவந்த பழம் பறிப்பானாம். அங்கங்கே கனிக ளனேகம் பறிக்கையிலே அடுத்த புதரிலேதா னரவ மெழுந்திருந்து சரிந்த வனந்தனிலே சர்ப்பமெழுந்திருந்து மதவீமராஜாவை மலைப் பாம்பு கண்டது காண் தாரா முகமலைப் பாம்பு சந்தோஷமாகவே தான் மனது மிகக்குளிர்ந்து மதகரியானருகில் வந்து வாயைத் திறந்து மங்கே மதவீமனைப் பிடித்து, எடுத்து விழுங்கிற்று இயலான வீமனைத் தான் பாம்பென்று பார்த்ததில்லை.

பாரமத வீமனவன்
சர்ப்ப மெனப் பார்த்ததில்லை. சமர்த்துள்ள வீமனவன் கல் கொண்டதூர மட்டும் கடுகெனவே தான் நடந்தான் விசை கொண்டதூர மட்டும் வீசி நடந்தானே வழியுந் தெரியாமல் வந்த விடங் காணாமல்,
பதை தெரியாமல் பாம்பென்றறியாமல்,பெருங்குடலில்சாய்ந்து கொண்டான்.

பெருமாள் நிகர் வீமன் பாம்பென்றறிந் தானே பார முடிவேந்தன் சர்ப்ப மென்றறிந்தானே சமர்த்துள்ள வீமனவன்.

எண்ணாது மெண்ணியே இருந்து விசாரமிட்டான் அண்ணாரைத் தம்பியரை அல்லவரைத் தான்பிரிந்து
கூடப் பிறந்தவரை கொற்றவரை நான் பிரிந்து ஒக்கப் பிறந்தவரை உடற்பிறப்பை நான் பிரிந்து மாளும் விதியன்றோ வந்தேனறியாமல்
ஆகையினாலே தான் ஆயர் போகாதேயென்றார்.

அறியாமல் வந்ததினா லகப்பட்டேனென் செய்வேன். மாயன் சொல்கேளாமல் வந்து விட்டேனிவ் வனத்தில் அண்ணன் தருமராஜர் அழுது புலம்புரே தம்பியரைத் தேடியவர் தானே புலம்புவரே,
அறியாமல் வந்தேனே. ஆண்டவனே யென்ன செய்வேன் ஆயரே கோவிந்தா ஆதிமூலம் வந்தருளும்
மாயரே கோவிந்தா மகாதேவா காத்தருளும் என்று புலம்பி யிருந்தானே வீமனவன்.

தக்கப் புகழுடைய தருமரவரென்ன செய்தார். அர்ச்சுனன் கனி பறித்து அண்ணரண்டை வந்த பின்பு வாய் திறந்து தர்மராஜர், மதி மயங்கியேது. சொல்வார் வெற்றி மதயானை வீமன். கனி பறிக்க மதவீமன் போயுமல்லோ மன்னா நெடும் போதாச்சு போன விடத்திலே புதுமை யொன்றும் நானறியேன்.

மதவீமன்போன செய்தி வார்த்தை யொன்றும் நானறியேன் அண்ணரைத் தேடியே அழைத் தோடி வாராயோ ஓடியழைத்துமே ஒரு நொடியில் வாராயோ கண்டதும் அழைத்தோடி கடுகெனவே வாராயோ அப்போ தர்ச்சுனனும், ஆணழகனேது சொல்வான். அப்படியே போய் வாரேன் அடியேன் சரண மென்று,
சரண, சரண மென்று, சாய்த்தான்.

மகாபாரதம் கதை:

திரு முடியை முக்கால் வலம் வந்து மூன்று முறை தெண்டனிட்டான். போக விடை தாரு மென்று போர் விஜயன் தெண்டனிட்டான், போய் வாரு மென்று சொல்லிப் போக விடை கொடுத்தார். விடை பெற்றெழுந்தானே, விஜயப் பெருமாளும், காடு செடி தாண்டி, கரிய மலை தான் தாண்டி, ஆறு சுனை தாண்டிய திகவனந் தாண்டி சில்லென்ற காடும் செடியுமலை தாண்டி, சல்லடம் தான் போட்டு தட்டி வரிந்து கட்டி, தட்டி வரித்து கட்டித் தாமரைப் பூசுங்கு விட்டு பில்லை சமுதாடு பிகு வெடுத்த வொட்டியாணம் பட்டு கட்டி கட்டியல்லோ, பாலாவுந்தான் சொருகி அம்பு வில்லுந்தானெடுத்து, அர்ச்சுனன் வாறானே காலடியைத் தேடிக் கொண்டே கடுகெனவே தான் வருவான்.

பாரவனங்களிலே பார்த்திபன் வாறானே அவ்வனத்திலே கனிகள் அநேகம் பழுத்திருக்கும். கண்டானே அரிச்சுனன் காவலனு மேது சொல்வான். காலடியைக் கண்டோமே, காவலனைக் காணோமே, எங்கேயும் காணோமே, இயலான வீமனைத்தான், கூவியழைப் போ மென்று கொற்றவன் தான் நினைத்தான்.

அண்ணரே வீமரென்று அழைத்தானே வாள் விஜயன் கூவியழைக்கலுமே, குரல் கேட்டு வீமனுக்கு அர்ச்சுனன் தேடிவந்தே அழைக்கிறானென்று சொல்லி மாலை முடியான். மத வீமனேது சொல்வான். ஏதோ பெரும் பாம்பு என்னை விழுங்கினது. அரவத்தின் வாயிலே தானகப்பட்டுக் கொண்டேனப்பா. வெளுத்ததைப் பாலென் பார், வெள்ளமதை நீரென்பார் பொய்சொல்வான், புண்ணியவான், புகழ் வேந்தரண்ணருக்கு சிந்தை கலங்காமல் தேறு தலைந் சொல்லுமப்பா.

மனது கலங்காமல் வார்த்தைகளைச் சொல்லுமப்பா வனவாசம் தீர்ந்த பின்பு வையகத்தே போன பின்பு சேனை பரிவாரம் துரியோதனன் பாளையத்தை செண்டாட்ட மாட்டி வைத்துச் சேனைகளைக் கொன்றழித்து, கர்னன் சகுனியையுங் கண்டதுண்டமாக வெட்டி துரியோதனன் முதலாகச் சோதரர் நூற்றுவரை, காளையர்ச் சுனரே கடுங்காளை தூர நில்லும் அருகே நீவாராதே அர்ச்சுனாதூர நில்லும் கிட்டே நீவாராதே எட்ட நில்லு அர்ச்சுனரே இங்கே நவாராதே இறந்திடுவீர். தம்பியரே தூர நில்லு அர்ச்சுனா சேரவந்தால் மோசமடா
இனி பிழைப்போ மென்று தம்பி நீ எண்ணாதே தப்பிப் பிழைப்பேனென்று தம்பி நீ எண்ணாதே மற்றும் பிழைப்பேனென்று எண்ணாதேமன்னா நீ ஆயாசமாகாதே அண்ணருடன் சொல்லுமப்பா மன வருத்தங் கொள்ளாதே மன்னருக்குச் சொல்லுமப்பா தக்கப்புகழுடைய தருமர்த மண்ணரவர்,வெளுத்ததைப்பாலென்பார் வெள்ளமதை நீரென்பார் பொய்சொல்வான்புண்ணியவான் புகழ்வேந்தரண்ணருக்கு

சிந்தை கலங்காமல் தேறுதலைந் சொல்லுமப்பா மனது கலங்காமல் வார்த்தைகளைச் சொல்லுமப்பா, வனவாசம் தீர்ந்த பின்பு வையகத்தே போன பின்பு சேனை பரிவாரம் துரியோதனன் பாளையத்தை செண்டாட்ட மாட்டி வைத்துச்
கர்னன், சகுனியையுங் கண்டதுண்டமாக வெட்டி சேனைகளைக் கொன்றழி துரியோதனன்மு தலாகச் சோதரர் நூற்றுவரை,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *