பாரதியார்

பாரதியார் வாழ்க்கை | Bharathiar Life History

Post views : [jp_post_view]

Table of Contents

பாரதியார் வாழ்க்கை | Bharathiar Life History

பாரதியார்

பாரதியார் வாழ்க்கை | Bharathiar Life History – பாரதியின் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய வாழ்க்கை பயணத்தை எவ்வாறு நடத்தினார் என்பது பற்றிய முழு விவரங்களும் இங்கே உள்ளது.

Biography Of Bharathiar பாரதியாரின் பிறப்பு:

1882 – ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ம் தேதி (தமிழ்: சித்திர பானு வருடம் கார்த்திகை 27 ஆம் நாள்) மூல நட்சத்திரத்தில் பாரதியார் பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் சின்னச்சாமி ஐயர் மற்றும் லட்சுமி அம்மாள் ஆவர். பாரதியாருக்கு இளம் வயதிலேயே அவர்கள் வைத்த பெயர் சுப்பிரமணியன். மேலும் பாரதியின் செல்லப் பெயர் சுப்பையா.

பாரதியாரின் தாய் இறப்பு:

1887 – ஆம் ஆண்டு பாரதியின் தாய் லட்சுமி அம்மாள் மரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 5.

பாரதியாரின் தந்தை மறுமணம் செய்து கொள்ளுதல்:

1889 – பாரதியின் தந்தை மறுமணம் செய்து கொள்கிறார். சுப்பையாவுக்கு உபயணம். இளைஞன் அருட்கவி பொழிகிறான்.

பாரதியாருக்கு ‘பாரதி’ எனும் பட்டம் வழங்குதல்:

1893 – இப்போது பாரதிக்கு 11 வயது நடந்து கொண்டிருக்கும் பொழுது எட்டயபுர சமஸ்தானத்தில், புலவர்கள் நிறைந்திருந்த பெரும் சபையில் அவரை சோதித்துப் பார்த்து, அவரின் கவி திறமை கண்டு வியந்து “பாரதி”(கலைமகள்) என்ற பட்டம் அளித்தனர்.

1894 – திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இந்து காலேஜில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார்.

1897 – தமிழ் பேராசிரியர்கள் மற்றும் பண்டிதர்களுடன் சொற்போர்கள் நடத்த தொடங்கினார்.

பாரதியாரின் திருமணம்:

1897 – ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பாரதிக்கு 14 வரை வயது இருக்கும் பொழுது 7 வயது உடைய ‘செல்லம்மா’ என்ற பெண்ணுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

பாரதியாரின் தந்தை இறப்பு:

1898 – வருடம் ஜூன் மாதத்தில் பாரதியின் தந்தை மரணம் அடைந்தார். அவருடைய மரணத்திற்குப் பின் பெரும் துயர்களும் வாழ்க்கையை எவ்வாறு நடத்தப் போகிறோம் என்கின்ற சஞ்சலத்திலும் உலர்ந்தார்.

1898 – காசியில் தன்னுடைய அத்தை குப்பம்மாள் என்பவர்களிடம் தஞ்சம் அடைந்தார்.

பாரதியாரின் தோற்றம் உருவாகுதல்:

1898 – 1902 – பின்பு அலகாபாத் சர்வ கால சாலையில் பிரவேச பரீட்சையில் தேர்வு பெற்றார். காசியில் உள்ள இந்து கால சாலையில் சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தியும் கற்றார். அக்காலத்தில் மிகப்பெரும் மீசையை வைத்துக்கொண்டு, தலையில் ஒரு பெரிய தலைப்பாகையும் வைத்துக்கொண்டு இருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

பாரதியார் எட்டயபுர அண்ணனிடம் தோழமை பாராட்டுதல்:

1902 – 1904 – அதே ஆண்டில் எட்டயபுரம் என்ற ஊரில் தஞ்சம் புகுந்தார். பின்னர் எட்டயபுரம் மன்னரிடம் பேசி பழகுவதை வழக்கமாக கொண்டிருந்த பாரதியார் அம்மன்னருக்கு தோழராகவும் விளங்கினார்.

மேலும் தன்னுடைய பள்ளி படிப்புகளை முடித்த அவர் விருப்பமில்லாத வேலைகளை செய்து வந்தார்.

பாரதியாரின் முதல் பாடல் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகிறது:

1904 – கவி பாடல்கள் ஏற்றுவதில் பல்லவராய் இருந்த பாரதியார் மதுரை “விவேக பானு” என்ற பதிப்பகத்தில் “தனிமை இரக்கம்” என்ற அவர் எழுதிய முதல் பாடல் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

1904 – இதே வருடத்தில் ஆகஸ்ட் முதல் நவம்பர் மாதம் வரை மதுரை சேதுபதி உயர்நிலை பள்ளியில் தற்காலிக பண்டிதராய் பணியாற்றினார்.

பாரதியார் சுதேசி மித்திரன் பத்திரிக்கைக்கு ஆசிரியராய் ஆகுதல்:

1904 – அதே வருடம் நவம்பர் மாதத்தில் சென்னையில் உள்ள சுதேசி மித்ரன் என்ற பத்திரிக்கைக்கு உதவி ஆசிரியராய் ஆனார். ஜி சுப்பிரமணிய ஐயர் என்பவரிடம் மேலும் பல கல்விகளை பயின்றார். பின்னர் “சக்கரவர்த்தினி” என்ற மாத பத்திரிக்கையில் ஆசிரியராக பொறுப்பேற்றார்.

பாரதியார் அரசியலில் தீவிரமாய் இறங்குதல்:

1905 – ஆம் ஆண்டு வங்கப் பிரிவினை என்ற பெரும் போர் நடந்து கொண்டிருந்தது. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கிய பாரதி சமூக சீர்திருத்தவாதி மற்றும் அரசியல் காலத்திலும் தீவிரமாய் இறங்கினார். காசியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு சென்று திரும்புகையில் விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிதா தேவியை சந்தித்து தம்முடைய ஞான குருவாக அவரை ஏற்றுக் கொண்டார்.

1906 – இதே ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சென்னையில் புரட்சிகரமான இந்தியா என்ற வார பத்திரிக்கை ஒன்று உதயம் ஆனது. அந்த பத்திரிக்கைக்கு இவர் பொறுப்பாசிரியராய் ஆனார். மேலும் பல அரசியல் தலைவர்களான மண்டையம் நா.திருமலாச்சாரி, எஸ். ஸ்ரீனிவாசாரி, வ உ சிதம்பரனார் ஆகியோரின் நட்பு கிடைத்தது.

மேலும் விபினா சந்திர பாலர் என்பவரை சென்னையில் சென்று பார்த்து வந்தார். அதே நேரத்தில் “பால பாரத” என்ற ஆங்கில வார பத்திரிக்கை வரத் தொடங்கியது.

இந்தியா என்ற பெயர் உருவாகுதல்:

1907 – இதே வருடம் டிசம்பர் மாதம் சூரத் காங்கிரஸ் என்னும் திலகரின் தீவிரவாத கோஷ்டிகளுக்கு ஆதரவு அளித்தார் பாரதி. மேலும், வ.உ சிதம்பரம் பிள்ளை, ஸ்ரீனிவாச சாரியுடன் மற்றும் பல சென்னையைச் சேர்ந்த இளைஞர்களை சூரத் அழைத்து செல்கிறார்.

இந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்படுகிறது. மேலும் பாரதியார், திலகர், அரவிந்த், லஜபதி ஆகியோரையும் சந்திக்கிறார்.

பாரதியாரின் அரசியல் எதிரியான, பழுத்த மிதவாதி வீ. கிருஷ்ணசாமி ஐயர் பாரதியின் தேசிய கீதங்களில் மோகித்துப் போகிறார்.“சுதேச கீதங்கள்” என்ற தலைப்பில் மூன்று பாடல்கள் கொண்ட நாலு பக்க பிரசுரம் நிறைய வெளியிட்டு இலவசமாய் விநியோகிக்கிறார் கிருஷ்ணசாமி ஐயர்.

1908 – சென்னை தீவிரவாதிகள் கோட்டை, “சுயராஜ்ய தினம்” சென்னையில் பாரதியாளும், தூத்துக்குடியில் வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, சுதேசி பத்மநாப ஐயங்கார் முதல்வரால் கொண்டாடப்படுகிறது.

இதனால் ஆங்கிலேயர்களால் மூவரும் அந்தந்த ஊர்களில் கைது செய்யப்படுகின்றனர். மேலும் வ உ சி மற்றும் சுப்பிரமணிய சிவாவுக்கு சிறை தண்டனையும் அளிக்கப்படுகிறது. அதே வழக்கில் பாரதியும் சாட்சி சொல்கிறார்.

“தேசிய கீதங்கள்” என்ற கவிதை தொகுதியை பாரதியார் வெளியிடுகிறார். இதுவே இவருக்கு முதல் நூலாகும். அதேசமயம் நம்முடைய நாட்டின் தற்போதைய பேரான இந்தியா என்ற பெயரும் நாடு முழுக்க ஒழிக்க தொடங்குகிறது.“இந்தியா” என்ற பெயரின் மீது சர்க்கார் பார்வை விழுகிறது. இதற்கு சட்டபூர்வமாக இருந்த ஆசிரியர் கைது செய்யப்படுகிறார். மேலும் பாரதியார் மீதும் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படுகிறது.

இதனால் பாரதி சென்னையை விட்டு தப்பி போய் புதுச்சேரியில் சேர்கிறார். புதுச்சேரி அவருக்கு ஒரு பழக்கம் அற்ற ஊராக இருக்கிறது. இதனால் அவருக்கு போலீஸ் தொல்லையும் அதிகரிக்கிறது. அப்போது அங்குள்ள குவளை கண்ணன் என்ற நபரை சந்திக்கிறார்.

1908 – 1910 – “இந்தியா” வும் புதுச்சேரி வந்து, பிரெஞ்சு இந்திய எல்லைகளிலிருந்து பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மீது நெருப்பு மழை பொழிகிறது. பத்திரிக்கையில் செல்வாக்கு அதிகரிப்பது கண்டு பிரிட்டிஷ், இந்தியாவில் நுழையாதபடி பிரிட்டிஷ் சர்க்கார் தடுக்கின்றனர்.“இந்தியா” நின்று போகிறது.

1909 – பல்வேறு இன்னல்கள் மற்றும் போலீஸ் பிரச்சனைகளுக்கு நடுவில் “ஜன் மபூமி” என்ற இரண்டாவது கவிதை தொகுதியையும் வெளியிடுகிறார்.

பாரதியார் வெளியிட்ட அனைத்து பத்திரிகைகளும் தடைபடுதல்:

1910 – “விஜயா” என்ற தினசரி பத்திரிக்கையும், “சூரிய உதயம்”என்ற வார பத்திரிக்கையும், “பால பாரத” என்ற ஆங்கில வார பத்திரிக்கையும், “கர்மயோகி” என்ற மாத பத்திரிக்கையும், இவை அனைத்தும் நின்று போகின்றன.

“சித்திரவள்ளி” என்ற ஆங்கில மற்றும் தமிழ் கார்ட்டூன் பத்திரிகை திட்டம் நிறைவேறாமல் போகிறது.

இதே வருடம் ஏப்ரல் மாதத்தில் பாரதி ஏற்பாடு செய்ய அரவிந்தர் புதுச்சேரி வந்து சேர்கிறார். பின்பு வேத நூல் பற்றி ஆராய்ச்சி நடக்கிறது.

நவம்பர் மாதத்தில் “கனவு” என்ற “ஸ்வயாசரிதை” முதலிய பாடல் அடங்கிய “மாதா மணிவாசகம்” நூல்கள் வெளியிடப்படுகிறது. வ.உ.சி, ஐயர் பாரதியை பார்க்க வருகை தருகின்றனர்.

மணியாச்சியில் கலெக்டர் சுட்டுக்கொலை:

1911 – இது வருடத்தில் தான் மணியாச்சியில் கலெக்டர் ஆஷ் கொலை செய்யப்படுகிறார். அதே சமயம் புதுச்சேரியில் உள்ள தேசபக்தர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்படுகிறது. இதனால் போலீசாரின் கெடுபிடிகள் அதிகரிக்கின்றன.

புதுச்சேரியில் இருந்து தேச பக்தர்களை வெளியேற்ற முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றது. மேலும் அதே சமயத்தில் பாரதியின் சிஷ்ய கோடிகள் பெருகுகின்றனர்.

பாரதியார் பல்வேறு படைப்புகள் வெளியீடு:

1912 – இந்த வருடமே பாரதியின் உழைப்பு மிக்க வருடம். பகவத் கீதையை மொழிபெயர்ப்பு செய்கிறார். அதேசமயம் ‘கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம்’ ஆகிய நூல்களையும் எழுதி முடிக்கின்றார். மேலும் “பாஞ்சாலி சபதம்” முதல் பாகம் வெளியிடும் செய்யப்படுகிறது.

1913 – 1914 – “சின்னச் சங்கரன் கதை” என்னும் அச்சிடப்படாத கையெழுத்துப் பிரதி மறைந்து போகிறது.”ஞானபாநு” பத்திரிக்கைக்கு விஷயதானம்.

தென்னாப்பிரிக்கா நேரலில் “மாதா மணி வாசகம்” என்ற நூல் பிரசுரம் செய்யப்படுகிறது. இதனால் முதல் மகா யுத்தம் ஆரம்பம் ஆகிறது. புதுச்சேரியில் தேசபக்தர் தொல்லைகள் அதிகரிக்கிறது.

1917 – இதே வருடத்தில் பாரதியார் எழுதிய “கண்ணன் பாட்டு” என்ற நூலின் முதல் பதிப்பை பரளிசு நெல்லையப்பர் சென்னையில் வெளியிடுகிறார்.

பாரதியார் போலீஸாரால் கைது செய்யப்படுதல்:

1918 – மேலும் நெல்லையப்பார் சுதேச கீதங்களை “நாட்டுப்பாட்டு” என்று வெளியிடுகிறார்.

புதுவையின் வாசம் சலித்து போய், புதுவையை விட்டு நவம்பர் 20ஆம் தேதி பாரதி கிளம்புகிறார். அப்பொழுது கடலூர் சென்று கொண்டிருக்கும் பொழுது போலீஸாரால் பாரதி கைது செய்யப்படுகிறார். மேலும் ரிமைண்டில் 34 நாட்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் வழக்கு இல்லை என்று நீதிமன்றம் அவரை விடுதலை செய்கின்றது. பின்பு நேராக மனைவியின் ஊர் கடாயத்திற்கு செல்கிறார்.

1918 – 1920 – கடாயம் என்ற ஊரில் அங்கேயே தங்குகிறார். பின்னர் திருவனந்தபுரம், எட்டயபுரம், காரைக்குடி, கானாடுகாத்தான் ஆகிய ஊர்களுக்கும் போய் வருகிறார்.

எட்டயபுரம் மன்னருக்கு அவர் எழுதிய துண்டு கவிதைகள் எந்த பயனும் இல்லாமல் போனது. அதே சமயம் தாகூருடன் நோபல் பரிசுக்காக போட்டியிட விருப்பம் கொண்டார். ஆனால் அதுவும் நடைபெறவில்லை.

பாரதியார், ராஜாஜி மற்றும் காந்தியுடன் சந்திப்பு:

1919 – இதே ஆண்டு மார்ச் மாதத்தில் சென்னைக்கு செல்கிறார். அங்கு ராஜாஜி வீட்டில் காந்தி யுடன் சந்திப்பு நடக்கிறது.

1920 – இதே வருடம் டிசம்பர் மாதத்தில் சென்னையில் “சுதா சிமித்ரா” என்ற பத்திரிக்கையில் மீண்டும் உதவி பேராசிரியராக வேலைக்கு செல்கிறார். அப்போது அவருக்கு ஏ.ரங்கசாமி ஐயர் ஆசிரியராக உள்ளார். பாரதி மீண்டும் நிறைய கட்டுரைகள் எழுத தொடங்குகிறார்.

பாரதியாரின் இறப்பு:

1921 – ஜூலை முதல் ஆகஸ்ட்: திருவல்லிக்கேணியில் உள்ள கோவிலுக்கு சென்றிருந்த பொழுது பாரதியாரை அங்கிருந்த யானை ஓங்கித் தள்ள யானையின் காலடியில் அவர் விழுந்து நசுக்கப்படுகிறார். மேலும் அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்றுகின்றனர்.

இந்த அதிர்ச்சியால் பாரதியார் பெறும் நோயுற்று படுத்திருக்கிறார்.

செப்டம்பர்: யானை தள்ளிய அதிர்ச்சி நோயிலிருந்து குணமடைந்தாலும், வயிற்றுக் கடுப்பு நோய் அவருக்கு அதிகரித்து காணப்படுகிறது.

செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி: வயிற்று கடுப்பு நோய் மிகவும் கடுமையாகிறது. மேலும் மருந்துகளை உண்ணவும் அவர் மறுத்துவிட்டார்.

செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி: நல்லிரவு தாண்டி காலை ஒன்று முப்பது மணிக்கு அவரது உயிர் பிரிந்து விடுகிறது.

அப்போது இவருக்கு 39 வயது கூட நிறைவடையவில்லை.

மேலும் படிக்க: மருத்துவம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள Maruthuvam

மேலும் பல்வேறு தகவல்களுக்கு தொடர்ந்து படியுங்கள்  Mttamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *