சித்த மருத்துவம் பயன்கள் - பாரம்பரிய சித்த மருத்துவம்

Table of Contents

சித்த மருத்துவம் பயன்கள் - பாரம்பரிய சித்த மருத்துவம்

சித்த மருத்துவம் பயன்கள் - பாரம்பரிய சித்த மருத்துவம்:- “உணவே மருந்து மருந்தே உணவு” என்பது சித்தர்களின் வாக்கு. நம் பசியை போக்கும் உணவே உயிர் காக்கும் சிறந்த மருந்தாக செயல்படுகிறது. சித்த மருத்துவம் என்பது இந்தியாவில் குறிப்பாக நம் தமிழகத்தில் தான் பண்டைய கால சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ முறை ஆகும். சித்த மருத்துவம் எப்போது தோன்றியது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாத ஒன்று. மரபு முறைப்படி அடுத்தடுத்த தலைமுறையில் கடந்து வந்துள்ளது.

பாரம்பரிய சித்த மருத்துவம் || சித்த மருத்துவம் புத்தகம்

சித்த மருத்துவம் பயன்கள்: சித்தர்கள் நம் இயற்கையில் கிடைக்கக்கூடிய செடி, கொடி, மரம், புல், பூண்டு, வேர், இலை, பூ, பட்டை, பிஞ்சு, காய், பழம் விதை போன்ற எண்ணற்ற மூலிகை பொருட்களைக் கொண்டு ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு பொருள்களை மருந்தாக பயன்படுத்தி குணப்படுத்தியுள்ளனர்.

சித்தர்கள் இவற்றையெல்லாம் எளிமையாக கண்டுபிடிக்கவில்லை. அவர்களின் மெய்ஞானம் போன்ற அறிவுத்திறமையால் இவற்றை கண்டுபிடித்து அதை அடுத்த தலைமுறைக்கு விட்டு சென்றுள்ளனர். இந்த சித்த மருத்துவ முறையானது காலம் கடந்தும் இன்றளவும் பல நோய்களை குணப்படுத்தும் மருத்துவம் ஆகும்.

இதில், இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்களில் மருந்துவ குணங்கள் இதில் மருத்துகள் தயாரிப்பதனால் நம் உடலுக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. அதேபோல், இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு மிக குறுகிய காலத்திலேயே மருந்துகள் தயாரிக்கலாம்.

சித்த மருத்துவம் பயன்கள்:

1. ஆஸ்துமா:

சித்த மருத்துவம் பயன்கள்: ஆஸ்துமா நோய் குணமடைய ஊமத்தன் பூ, ஆடா தோடை இலை-6, பூவரசன் பூ-6 போன்றவற்றை நிழல் காய்ச்சலாக உலர்த்தி சாம்பிராணி புகை போடுவது போல் தீக்கங்குகளில் இட்டு புகை பிடித்து சுவாசித்து வந்தால் ஆஸ்துமா நோய் குறையும்.

2. மஞ்சள் காமாலை:

கீழாநெல்லி இலை, கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கோவை இலை, இசங்கு வேர் தொலி இவைகளை சரிசமமாக எடுத்து அதனை ஆட்டுப்பால் அல்லது சாதாரண பால் விட்டு அரைத்து காலை மாலை என இரண்டு நேரங்களிலும் தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமடையும். இந்த ஒரு வார நாட்களில் உணவில் உப்பு, புளி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

3. வயிற்றுப்போக்கை நிறுத்துவதற்கு:

சிறிதளவு ஒரு துண்டு வசம்பை நன்றாக அரைத்து பாலுடன் சேர்த்து கொடுத்தாலும் மற்றும் ஒரு மாம்பருப்பை தேனுடன் அல்லது மோருடன் கலந்து கொடுத்தாலும் வயிற்றுப்போக்கு உடனடியாக சரியாகிவிடும்.

4. வெட்டுக் காயங்கள் சரியாக:

நாயுருவி இலை அல்லது அம்மான் பச்சரிசி (பாலட்டன் குளை) இலையுடன் வெளங்கிளைப் பூண்டு அரிசி-2 சேர்த்து நன்றாக அரைத்து வெட்டுப்பட்ட இடங்களில் கட்டி வந்தால் காயங்கள் விரைவில் குணமடையும்.

5. குடி போதை மறக்க:

நெல்லிக்காய் தூள், சர்க்கரை, கொத்தமல்லி, இலவங்கப்பட்டை, மிளகாய் செடி, வாழைச்சாறு போன்றவற்றை சேர்த்து தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் 100-மில்லி அளவு குடித்து வந்தால் ஒரு மாதத்தில் பலன் கிடைக்கும்.

6. வாந்தியை நிறுத்துவதற்கு:

சதகுப்பையை பொன் வறுவலாக நன்றாக வறுத்து பொடி செய்து 1-டம்ளர் நீரில் 10-கிராம் பொடியை போட்டு இதனுடன், 10-கிராம் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் வாந்தி உடனடியாக நிற்கும். அன்று ஒரு நாள் மட்டும் நீர் ஆகாரம் சாப்பிட வேண்டும்.

7. கால் ஆணிக்கு மருந்து:

மருதாணி இலை, சுட்டு எடுத்த மஞ்சள், வசம்பு போன்றவற்றை சரிசமமாக எடுத்து மைபோல் நன்றாக அரைத்து கால் ஆணிகளில் கட்டி வந்தால் விரைவில் குணமடையும்.

8. தலைப்பேன் போக:

மருதோன்றி பூவை தேங்காய் எண்ணெயில் நன்றாக கலந்து காய்ச்சி தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் பேன்கள் அனைத்தும் அழிந்து விடும்.

9. தோலில் வெண்புள்ளி மாறுவதற்கு:

கொடிவேலி வேர் தொலி, குன்னி முத்து இலை சாறு, கண்டங்கத்திரி பழம் போன்றவற்றை ஒன்றாக கலந்து நன்றாக அரைத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வெண் தோல் உள்ள பகுதிகளில் தினமும் தொடர்ந்து போட்டு வந்தால் 48 முதல் 50 நாட்களில் வெண் தோல் மாறிவிடும்.

10. குதிங்கால் வலி நீங்குவதற்கு:

முட்டை கருவை எருக்கன் பாலுடன் சேர்த்து நன்றாக பிசைந்து வலி உள்ள கால் பாகங்களில் நன்றாக தேய்த்து நெருப்பில் அனல் பட காட்டி வந்தால் வலி தீரும்.

11. தலை பொடுகு நீங்குவதற்கு:

வேப்பம் பூ 50-கிராம் எடுத்து நன்றாக உடலில் இடித்து எடுத்துக்கொண்டு 250-மில்லி தேங்காய் எண்ணெயில் சேர்த்து நன்றாக காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் பொடுகு, ஈறு, பேன் இவையெல்லாம் அழிந்து விடும்.

12. முகம் பொலிவுடன் இருப்பதற்கு:

கடலை மாவு, ஆவாரம் பூ இரண்டையும் சரிசமமாக எடுத்து பசும்பால் கலந்து நன்றாக அரைத்து முகத்தில் தேய்த்து 1-மணி நேரம் கழித்து மிதமான வெந்நீரில் முகத்தை கழுவி தூய்மையான மெல்லிய துணியால் துடைத்து வந்தால் முகம் பொலிவுடன் இருக்கும்.

13. தோல் அரிப்பு சரியாவதற்கு:

• நம் உடம்பில் ஏற்படும் தோல் அரிப்பு, சொரி, சிரங்கு, தேமல், படை போன்றவற்றை இயற்கையில் விரைவில் குணப்படுத்துவதற்கு
“குப்பைமேனி” தாவரம் ஒரு சிறந்த மருந்து ஆகும்.

• ஒரு கிண்ணத்தில் 1-டேபிள் ஸ்பூன் குப்பைமேனி பொடி, 1-டேபிள் ஸ்பூன் வேப்பிலை பொடி, 1/2-டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 1-டேபிள் ஸ்பூன் சிட்டிகை மிளகு போன்றவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

• அதன் பிறகு 10-டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து 15-நிமிடம் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்க வைத்த எண்ணையை இறக்கி சூடு குறைந்த பிறகு வடிகட்டி தோல் அரிப்பு மற்றும் சொறி சிரங்கு உள்ள பகுதிகளில் தேய்த்து வந்தால் உடனடியாக சரியாகிவிடும்.

• இதில் நாம் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் நம் உடலில் உள்ள கிருமிகளை முற்றிலும் வெளியேற்றுவதற்கு பெரும் உதவியாக இருக்கிறது.

14. வாய் துர்நாற்றம் நீங்குவதற்கு:

• நம் வாய் துர்நாற்றத்தை நீக்க நம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கொத்தமல்லி தழையின் விதையை நன்றாக வாயில் போட்டு மென்று துப்பினால் வாய் துர்நாற்றம் நீங்கி விடும்.

• கொத்தமல்லி இலையில் வைட்டமின்-ஏ சத்து அதிக அளவில் இருக்கிறது. இதனால், கொத்தமல்லி பொடியை தினமும் நாம் பயன்படுத்த இதயம் வலிமை ஆகும். உடலுக்கு வலிமையை கொடுக்கும், ஆண்மையையும் அதிகரிக்கும்.

• பசியை அதிக அளவில் தூண்டி வயிற்றில் உள்ள வாயுவை அறவே நீக்கிவிடும்.

15. இருமல், தூக்கமின்மை, ஒற்றைத் தலைவலி நீங்குவதற்கு:

சித்த மருத்துவம் பயன்கள்: இருமல், வயிற்று வலி, ஒற்றைத் தலைவலி மற்றும் பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகளுக்கு ஏலக்காய், ஜாதிக்காய், கிராம்பு மற்றும் சித்திர மூலவேர் போன்ற பொருட்களை கொண்டு நன்றாக அரைத்து அந்த பொடியை சரியான அளவு சாப்பிட்டு வந்தால் இவை அனைத்தும் மிக விரைவில் குணமாகும்.

16. உடல் எடை மற்றும் ரத்தத்தில் உள்ள கொழுப்பு குறைவதற்கு:

உடல் எடை மற்றும் ரத்தத்தில் உள்ள கொழுப்பு முழுமையாக குறைவதற்கு கொள்ளு ரசம் வைத்து இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் இவை அனைத்தும் குறைந்து ஆரோக்கியமான உடல் எடை ஏற்படும்.

17. கண் எரிச்சல் குணமாவதற்கு:

சித்த மருத்துவம் பயன்கள்: தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிக அளவு உள்ளதால் புற ஊதாக்கதிர்கள் உண்டாகி நம் கண்களில் அதிக அளவில் எரிச்சல் ஏற்பட்டு சிவப்பு தன்மை உண்டாகிறது. இதனால், கிருமிகள் தொற்றி கண்களில் எரிச்சல் ஏற்படுகிறது. இதற்கு, கொத்தமல்லி மற்றும் வில்வ இலைகளின் சாறு நல்ல மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

18. அருகம்புல்லின் பயன்கள்:

• வயிற்றுப்புண் விரைவில் குணமாக அருகம்புல் சாரை குடிக்க வேண்டும்.

• நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களுக்கு சர்க்கரையின் அளவை சரியான முறையில் பராமரிக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது.

• புற்றுநோய் சரியாவதற்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

• கர்ப்பப்பை கோளாறுகள் அனைத்தும் சரியாகும்.

• நம் நீண்ட நாள் ஆரோக்கியமாக இளமை பொலிவுடன் இருப்பதற்கும் இந்த அருகம்புல் சாறு உதவுகிறது.

• இரத்த அழுத்தம் விரைவில் குணமாகும். இரத்த சோகை நீங்கி இரத்தம் அதிகரிக்கும்.

• ஆஸ்துமா மற்றும் சளி போன்ற நோய்களை குணப்படுத்துகிறது.

• உடல் இளைப்பதற்கும், பல் ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகளை குணப்படுத்துவதற்கும் மருந்தாக பயன்படுகிறது.

• உடம்பு வலி நீங்கி உடம்பை மசாஜ் செய்தது போல் இருக்கும் இரவில் நன்றாக தூக்கம் வரும்.

• நம் அன்றாட வாழ்வில் தினசரி காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிப்பதன் மூலம் நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் மிக ஆரோக்கியமாக இருக்கலாம்.

19. வழுக்கையான இடத்தில் முடி வளர:

சித்த மருத்துவம் பயன்கள்: கீழாநெல்லி வேரை நன்றாக சுத்தம் செய்துவிட்டு சிறு சிறுது துண்டுகளாக நறுக்கி அதை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் வழுக்கை நிறம் மாறி முடி வளர தொடங்கும்.

1) இளநரை மாறுவதற்கு:

நாம் சாப்பிடும் உணவில் நெல்லிக்காயை அடிக்கடி சேர்த்துக் கொண்டால் இளநரை நீங்கி கருமை நிறமாக மாறும்.

2) முடி கருமையாக நிறத்தில் இருப்பதற்கு:

செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் பிஞ்சு வேரை நன்றாக இடித்து தூள் செய்ததை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் முடி கருப்பாக இருக்கும்.

20. மலேரியா காய்ச்சல் குணமாவதற்கு:

சித்த மருத்துவம் பயன்கள்: நிலவேம்பு பொடி, பற்பாடகம், விஷ்ணு கிரந்தை, மிளகு இவை அனைத்தையும் 10 கிராம் அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பூண்டு-2, திப்பிலி-3, சுக்கு சிறிதளவு இவை அனைத்தையும் தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த கசாயத்தை 100-மில்லி அளவு தினமும் காலை, மாலை குடித்து வந்தால் மலேரியா காய்ச்சல் மற்றும் அனைத்து விதமான காய்ச்சலும் சரியாகும். இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைந்து இருந்தால் பப்பாளி இலை சாறை சிறிதளவு இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சித்த மருத்துவம் குறிப்புகள்:

சித்த மருத்துவம் என்றால் என்ன?

சித்த மருத்துவம் என்பது இந்தியாவில் குறிப்பாக நம் தமிழகத்தில் தான் பண்டைய கால சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ முறை ஆகும். சித்த மருத்துவம் எப்போது தோன்றியது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாத ஒன்று.

சித்த மருத்துவ பொருள்கள்:

சித்தர்கள் நம் இயற்கையில் கிடைக்கக்கூடிய செடி, கொடி, மரம், புல், பூண்டு, வேர், இலை, பூ, பட்டை, பிஞ்சு, காய், பழம் விதை போன்ற எண்ணற்ற மூலிகை பொருட்களைக் கொண்டு ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு பொருள்களை மருந்தாக பயன்படுத்தி குணப்படுத்தியுள்ளனர்.

சித்த மருத்துவத்தின் தந்தை யார்?

சித்த மருத்துவத்தின் தந்தை “அகத்தியர்” ஆவார். இவர், புகழ்பெற்ற 18-சித்தர்களில் ஒருவர்.

தமிழ் மருத்துவம் எது?

தமிழ் மருத்துவம் என கருதப்படுவது “சித்த மருத்துவம்” ஆகும்.

மருத்துவ முறை என்றால் என்ன?

மருத்துவம் என்பது நோய்களை குணப்படுத்துவதற்கான கலையும் அறிவியலும் ஆகும். இதனை, நோய்களை கண்டுபிடிக்கவும், அவற்றை குணப்படுத்துவதற்கும், அவை வராமல் தடுக்கவும் உதவும் “அறிவியல் அல்லது செயல்பாடு” என்றும் கூறலாம்.

9 சித்த மருத்துவம் என்றால் என்ன?

சித்த மருத்துவத்தின் மருந்துகளை சித்தர்கள் மூலிகை, தாது மற்றும் சீவப் பொருட்களில் இருந்து தயாரித்து உள்ளனர்.

இயற்கை வைத்தியம் என்றால் என்ன?

இயற்கை வைத்தியம் என்பது உடல், மனம், ஆன்மா போன்ற அனைத்தையும் ஒன்று சேர்த்த மருத்துவ முறை ஆகும். இயற்கை மருத்துவம் பாதிக்கப்பட்டுள்ள உறுப்புகளை மட்டும் பார்க்காமல் உடலில் உள்ள அனைத்து பகுதிகளையும் சரி செய்கிறது. இந்த இயற்கை மருத்துவத்திற்கு உணவு தான் சிறந்த மருந்து ஆகும்.

ஆயுர்வேதம் & சித்த மருத்துவம் வேறுபாடு:

சித்த மருத்துவம் என்பது சித்தர்கள் மூலம் இயற்கையில் கிடைக்கக்கூடிய மூலிகைகள் வைத்து கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவமாகும்.

ஆயுர்வேதம் என்பது இயற்கையில் விளையும் பயிர்களில் உள்ள மருத்துவ குணங்களை பெரியோர்கள் அவர்களின் அனுபவரீதியாக உணவாக எடுத்துக் கொள்ளும் மருந்து ஆகும்.

சித்த மருத்துவம் பக்க விளைவுகள்:

சித்த மருத்துவம் பயன்கள்:- சித்த மருத்துவம் உடலுக்கு எந்த ஒரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை. இது நம்மை சுற்றியுள்ள இயற்கையில் கிடைக்கும் தாவரங்களைக் கொண்டு மருந்து பொருட்கள் தயாரிக்கப்படுவதால் அந்தந்த நோய்க்கு ஏற்றவாறு ஒவ்வொரு மருந்தையும் நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

Read Also:- பங்குனி உத்திரம் வரலாறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *