இந்தியாவின் மக்கள் தொகை – Population of India

இந்தியாவின் மக்கள் தொகை – Population of India

இந்தியாவின் மக்கள் தொகை

இந்தியாவின் மக்கள் தொகை – Population of India: பொதுவாக மக்கள் தொகை என்பது ஒரு நாட்டில் அல்லது ஒரு பகுதியில் வாழக்கூடிய ஒட்டுமொத்த மக்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதே மக்கள் தொகை என்று அழைக்கப்படுகிறது.

இந்த மக்கள் தொகையை கணக்கெடுப்பதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளது. முதலில் பிறப்பு விகிதம் மற்றும் இறப்பு விகிதம், இடம் பெயர்தல் ஆகியவை இதில் அடங்கும்.

இந்த இடம் பெயர்தலில், ஒரு நாட்டில் இருக்கும் மக்கள் வெளிநாட்டிற்கு சென்று அங்கேயே குடியேறுதல் அல்லது வெளிநாட்டில் இருக்கும் மக்கள் நம் நாட்டிற்குள் வந்து குடி போகுதல் ஆகியவையாக இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம்.

பிறப்பு விகிதம் பற்றி பார்ப்போம் – Birth rate

மக்கள் தொகை பெருக்கத்தில் பிறப்பு வீதம் ஒரு நேரடியான மாறுதலை உண்டு பண்ணும். பிறப்பு வீத அதிகரிப்பால் மக்கள் தொகையிலும் அதியமான பெருக்கத்தை காண முடியும். எனவே ஒரு நாட்டின் மக்கள் தொகை இந்த பிறப்பு விகிதத்தை வைத்தே கணக்கிடப்படுகிறது.

பொதுவாக பிறப்பு விகிதம் என்பது ஒரு சில நடைமுறைகளை பின்பற்றுவதால் தான் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

அதாவது ஒரு நபருக்கு திருமண வயதை அடைந்தவுடன் குழந்தை பிறப்பானது அதிகரிக்கிறது. மேலும் சமூக பழக்கவழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் ஆகியவற்றாலும், சரியாக படிப்பு அறிவு இல்லாமை மற்றும் குழந்தை பெற்றுக் கொள்வதில் கட்டுப்பாடு இல்லாததால் இதுபோன்ற பிறப்பின் விகிதங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

மேலும், இளம் வயதில் திருமணம் செய்துதல் அதிகப்படியான குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்தல், சமூகங்களை கடைபிடித்தல் மற்றும் மூடநம்பிக்கைகள் பரவலாக நிலவும் படிப்பறிவு இல்லா நிலைமை, அதிகரிப்பு மற்றும் பிறப்பு கட்டுப்பாடு முறைகளை அறியாமல் இருத்தல் ஆகியவை மூலம் பிறப்பின் வீதம் உயர்ந்து மக்கள் தொகையானது அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

நம்முடைய நாட்டை பொறுத்தவரையில் சமூக விழிப்புணர்வு மற்றும் மக்களிடையே பரவி காணப்படும் கல்வி அறிவானது திருமண வயதை அதிகரிக்க உதவுகிறது. குடும்பக் கட்டுப்பாடுகளை பற்றிய அறிவு சார்ந்த விவரங்கள் மற்றும் குடும்ப நலனுக்காக பிறப்பு வீதத்தை குறைப்பது மற்றும் குழந்தை பிறப்பை அதிகரிப்பை குறைப்பது போன்றவை மூலமாக பிறப்பு விதத்தை குறைக்கலாம்.

இறப்பு விகிதம் பற்றி பார்ப்போம் – Mortality rate

மக்கள் தொகை பெருக்கத்திற்கு மற்றும் ஒரு காரணம் குறைவான இறப்பு வீதமே ஆகும். பசி, பட்டினி, மற்றும் சத்துள்ள உணவு கிடைக்காமல், மேலும் தொற்று நோய்கள் போதிய மருத்துவ வசதி இல்லாதது, சுகாதார வசதி இல்லாதது போன்ற காரணங்களால் இறப்பு விகிதம் அதிகரிக்கலாம்.

மறுபுறம் பார்க்கும் பொழுது சத்துள்ள உணவு தூய குடிநீர் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகள், துப்புரவு வசதிகள், தொற்றுநோய் ஒழிப்பு போன்றவற்றின் விரிவாக்கத்தால் இறப்பு வீதமானது குறைந்திருக்கிறது.

மக்கள் தொகை அதிகமானதற்கு முக்கிய காரணங்கள்

மக்கள் தொகை

அதிக பிறப்பு வீதமானது மக்கள் தொகையை பெருக்கத்திற்கு மிக முக்கியமாக காரணமாகும். கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் சுமார் 30 சதவீதம் அளவிற்கு மக்கள் தொகை அதிகரித்துக் காணப்படுகிறது. இவைகள் மூலம் திறப்பு விகிதம் குறையவில்லை என்பதே காட்டுகிறது. மேலும் குடும்ப நலன் பற்றிய விவரங்கள் மற்றும் குடும்ப நல வாழ்வு திட்டங்கள் மக்கள் தொகை பற்றிய கருத்தரங்குகள் மூலமாகவே பிறப்பு விகிதத்தை குறைக்க முடியும்.

எனவே இந்திய அரசானது ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள ஒவ்வொரு கிராமங்களுக்கும் தனித்தனியான மருத்துவர்கள் ஆலோசனைகளை கொடுக்க தனி குழுவையே நிர்ணயித்து உள்ளது.

இந்தியாவில் பொதுவாக இளம் வயதிலேயே அனைவருக்கும் திருமணம் செய்து கொள்வது என்பது வழக்கமாக ஒரு விஷயமாக இருக்கிறது. இந்திய பெண்களின் திருமண வயது பொதுவாக 18 வயதாக உள்ளது. இதனை நாம் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது மிக மிக குறைவான வயதில் இந்தியர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதை தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

மற்ற நாடுகளின் திருமண வயது சுமார் 23 லிருந்து 25 ஆக இருக்கிறது. இதனால் குழந்தை பெறும் காலம் அதிகரிக்கும் மற்றும் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு தனி மனிதனும் கட்டாயம் திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அது ஒரு இன்றியமையாத சமூக கடமையாகும். குடும்பத்தில் தனி நபரின் பொறுப்புக்கள் உணரப்படவில்லை மாறாக மொத்த நபர்களின் சமநிலையான நுகர்வோருக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. அனேக மக்களின் ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆண் குழந்தை என எதிர்பார்ப்பினால் குடும்பத்தின் அளவானது அதிகரித்து செல்கின்றது.

எனவே ஒரு குடும்பத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தாலும் நான்காவதாக ஆண் குழந்தை பிறந்து விடுமோ என்ற ஆவலோடு குழந்தைகளை பெற்றுக் கொண்டே செல்வதில் இந்தியர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள வறுமை

வறுமை என்பது ஒரு நாட்டில் எந்தவிதமான வேலைவாய்ப்பும் இல்லாமல் மக்கள் தொகையை அதிகரித்துக் கொண்டே செல்வதாகும். தனி ஒரு மனிதனுக்கு எந்த ஒரு பொருளாதார தேவையும் நிறைவேற்றிக் கொள்வதற்காக, அதாவது உணவு அல்லது உடைகள் வாங்குவதற்கு கூட பணம் என்ற விஷயம் தேவைப்படுகிறது.

இது என்ன நாம் பெறுவதற்கு எத்தகைய வேலைகளும் இல்லாத நிலையில் வறுமை என்பது ஏற்படுகிறது. வறுமையும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஒருவகையாக காரணமாக இருந்திருக்கலாம்.

குழந்தைகள் ஒவ்வொரு குடும்பத்திலும் வருமானம் ஈட்டக்கூடிய பெற்றோர்களுக்காக வேலைக்கு சென்று உதவி செய்ய வேண்டி உள்ளது. பள்ளிக்கு செல்லும் வயதில் வேலைக்கு சென்று பொருட்கள் ஈட்டுவதால் குழந்தைகள் குடும்பத்தின் சொத்தாக கருதப்படுகிறது. மேலும் கூடுதலாக பிறக்கக்கூடிய ஒவ்வொரு குழந்தைகளும் வருமானம் ஈட்டும் உறுப்பினர்களாகவே கருதப்படுகின்றனர். அது அவர்களின் குடும்ப வருமானத்திற்கு உதவியாக இருக்கிறது. இதன் காரணமாகவே மக்கள் தொகையானது அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்திய மக்களின் வாழ்க்கைத் தரம்

மக்களின் வாழ்க்கைத் தரம் குறைவானது அதிக குழந்தைகள் பிறக்க வழி வகுக்கின்றது. இதுவே அதிக குழந்தைகள் பிறக்க வழி வகுக்கின்றது. ஏனென்றால் குடும்பத்தில் ஒரு கூடுதல் குழந்தை பிறந்தால் அதுவே அந்த குடும்பத்தின் சொத்தாக கருதப்பட்டு அதன் மேல் பெரும் பொறுப்பு கொடுத்து விடலாம் என்ற எண்ணம் இருக்கிறது.

மக்கள் தொகையில் பெருமானார் கல்வி அறிவு அற்றவர்களாக இருப்பதினால் குடும்ப கட்டுப்பாட்டின் அவசியத்தையும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. சிறிய அளவில் குழந்தைகள் பெற்றுக்கொண்டு வாழ்வதனால் ஒரு நல்ல வாழ்க்கை தரத்தை அனுபவிக்க உதவுகிறது என்பதை அவர்களுக்கு தெரியாமல் இருக்கிறது.

கல்வி அறிவு இல்லாமை பற்றி பார்ப்போம்

இந்திய மக்கள் தொகையில் 60% மாணவர் பெரும்பாலும் கல்வி அறிவு இல்லாதவர்களாகவும் மற்றும் குறைந்த கல்வி அறிவை பெற்றோர்களாகவும் உள்ளனர். இதனால் அவர்கள் குறைவான வேலையை ஏற்றுக்கொண்டு தங்களை தாங்களே ஆதரித்துக் கொள்ள இயலாத நிலையில் வாழ்கின்றனர். வேலையின்மையும் குறைவான வேலை உடைமைகளையும் வறுமைக்கு வலிய வைக்கின்றது.

கல்வி அறிவு இல்லாததால் அதிக விகிதத்தில் நிலவும் மக்கள் தொகை பேரளவு அறியாமையால் இருந்து கொண்டு மூட சமூக பழக்க வழக்கங்கள் மற்றும் இளம் வயதில் திருமணம் ஆண் குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற மோகங்களினால் நிறைந்திருக்கிறார்கள். இதன் விளைவாகவே மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

மக்கள் தொகை பெருக்கத்தினால் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தடை

இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக பெரிய காணப்படுகின்றது. பொருளாதார வளர்ச்சிக்கு உழைப்பின் அழைப்பு அதிகமாக தேவைப்பட்டாலும் நமது மக்கள் தொகை தொடர்ந்து வளர்வதால் பொருளாதார வளர்ச்சி பாதிப்பு விடுகிறது.

இந்திய மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே இருப்பதால் அதற்கேற்ற விவசாய உற்பத்தியில் சமவீது வளர்ச்சி இல்லையெனில் கடுமையான உணவு பற்றாக்குறை பிரச்சினையை சந்திக்க வேண்டி இருக்கும். இதனால் இந்தியாவில் விவசாயிகளுக்கு என்று தனி அங்கீகாரம் அளிக்கப்பட்ட விவசாயத்தை ஊக்குவித்து வருகின்றனர்.

மக்கள் தொகை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகரிக்கிறதோ குழந்தைகளும் முதியவர்கள் எண்ணிக்கையும் அவ்வளவாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. குழந்தைகளும் முதியோரும் உற்பத்தியில் ஒரு பங்கினை வைக்காமல் பொருளை மட்டும் உட்கொள்கிறார்கள். இவராக குழந்தைகள் மற்றும் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, சத்துணவு மருத்துவ வசதி, பொது சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற அடிப்படை தேவைகளில் கவனம் செலுத்தப்படாமலேயே மக்கள் தொகை பெருகிக்கொண்டே வருகின்றது.

தனி மனிதனின் வருமானம் மற்றும் நாட்டு வருமானம்

அதிவேகமாக வளரும் மக்கள் தொகை தனி மனித வருமானம் மற்றும் நாட்டு வருமானத்தின் சராசரி வளர்ச்சி வீதத்தை தடை செய்கின்றது. நாட்டு வருமானத்தில் ஏற்பட்ட அதிகரிப்பை நிலையாக வளர்த்து வரும் மக்கள் தொகை நுகர்ந்து விடுகிறது.

அதிவேகமாக மக்கள் தொகை வளர்ச்சி அடைவதால் சேமிப்பு மற்றும் முதலீட்டின் திறனையும் குறைக்கிறது என்பது மிக ஆபத்தான விளைவாகும். நாட்டு வருமானம் மற்றும் தலா வருமானம் இந்தியாவில் குறைவாக உள்ள இந்நிலையில் சேமிப்பிற்கு என்று பணத்தை ஒதுக்க வாய்ப்பே கிடையாது. இதன் விளைவாக உறுதி தேவை குறைந்து மக்களின் வாங்கும் சக்தியும் குறைகிறது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி

நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிக்கு முதன்மையாக இருப்பது மூலதன ஆக்கம் அதாவது பொருட்கள் உற்பத்தியாகும். அதிலும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு இந்த விஷயம் மிக மிக முக்கியமாக அமைகிறது. எனது மூலதனம் ஆக்கம் மற்றும் சேமிப்பு முதலீடு ஆகியவற்றை சார்ந்துள்ளது. மக்கள் தொகையில் வளர்ச்சி இருக்கும் பொழுது இம்மூலதான ஆக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்பே கிடையாது.

இதன் விளைவாக தான் வேலையின்மையும் குறைந்த வேலை வாய்ப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறாக அதிவேக மக்கள் தொகை வளர்ச்சி அந்நாட்டில் மூலதன ஆக்கத்தை மிக மோசமாக பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அடிக்கடி குழந்தைகளை பெற்றுக் கொள்வதால் நீண்ட காலத்தில் உற்பத்தி நடவடிக்கைகளில் பெருமளவு மகளிர் வேலை செய்ய முடிவதில்லை. இதனால் மனித வளம் வீணாகிறது மேலும் பொருளாதார வளர்ச்சியும்.

மக்கள் தொகை பெருக்கமானது நாட்டு வருமானம் மற்றும் தனி நபர் வருமானத்தை பெருமளவில் பாதிக்கின்றது. இதன் காரணங்களால் தான் வாழ்க்கை தரமும் குறைகிறது. இது உற்பத்தி திறனை குறைய செய்கிறது. இத்தடைகள் பொருளாதார வளர்ச்சியை பாதிப்படையவும் செய்கிறது.

மக்கள் தொகை அதிகரிப்பானது குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இதன் காரணமாக மருத்துவ பராமரிப்பு, பொது சுகாதாரம், குடும்ப நலன், கல்வி, வீட்டு வசதி போன்ற சமூக செலவுகளின் தேவையற்ற செலவு அதிகமாகிறது.

இந்தியாவைப் பொறுத்த வரையில் மக்கள் தொகை வளர்ச்சியானது சிக்கன மற்றும் முறையாகிய நிலம் மற்றும் வீடுகள் துண்டு துண்டாக பிரிக்கப்படுகின்ற நிலைமையை உருவாக்கியது. நிலங்கள் மிகச் சிறிய அளவாக இருப்பதினால் இயந்திரம் ஆக்கப்பட்ட உழவு முறையை கையாள முடிவதில்லை.

மக்கள் தொகை வளர்ச்சி வேகம் தொழில்துறை வளர்ச்சியை அதிகமாக பாதிக்கிறது. இதன் காரணமாக குடிசை மற்றும் சிறுதொழிகளும் மேலும், பல தொழிலாளர்களும் போதுமான அளவில் வளர்ச்சி அடையவில்லை. பெரும் மற்றும் சிறிய தொழிலாளர்களுக்கு தேவையான மூலதனம் திருமளவில் தேவைப்படும் போது, இந்திய மூலதன ஆக்க வீதமோ மிக குறைவாக உள்ளது. நம் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு ஒதுக்கீடு செய்ய போதுமான முதலீடு இல்லை.

மக்கள் தொகை வளர்ச்சியினால் அரசாங்கத்திற்கு ஏற்படும் நிதிச் சுமை – Population growth India

அதுவேக மக்கள் தொகை அதிகரிப்பதனால் நிதிச் சுமையாக அரசாங்கத்திற்கு அமைகிறது. சமூக நலத்திட்டங்களாகவும், வறுமையை போக்குவதற்காகவும் வளங்களை திரட்டி வறுமையை அகற்றுவதற்கு பணத்தை செய்ய வேண்டி இருக்கிறது.

மேலும் தூய்மையான குடிநீர் வழங்குவதற்கும், மக்களுக்கு குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கும், நல்ல சுகாதார சூழ்நிலை உருவாக்குவதற்கும், மருத்துவ வசதியை செய்து தருவதற்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் பெரும் பொருளை அரசு செலவு செய்த வேண்டிருக்கிறது.

மக்கள் தொகையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராவிட்டால் அரசு அதிக உற்பத்தி நோக்கத்திற்காக செலவு செய்யக்கூடும். இதன் மூலமாக நாடு மற்றும் நாட்டில் உள்ள ஒவ்வொரு மனிதர்களுக்கும் வருமானம் உயரும் வாழ்க்கை தரமும் உயர்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த காரணங்களால் தான் இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. மக்கள் தொகையின் அதிவேக வளர்ச்சி வீதம் பொருளாதாரம் முன்னேற்றத்தை மிகவும் மோசமாக அளவு பாதிக்கிறது. எனவே ஒரே இடத்தில் நிற்பதற்கு நாம் ஓடிக்கொண்டே இருக்க வேண்டி உள்ளது என்று சில நேரங்களில் சொல்லப்படுகிறது.

கடந்த 2020 ஆண்டின் படி இந்தியாவின் மக்கள் தொகை 139 கோடியாக உள்ளது.மேலும், உலக மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

Leave a Comment