அலர்ஜி அரிப்பு நீங்க சித்த மருத்துவம் || ஸ்கின் அலர்ஜி மருத்துவம்

அலர்ஜி அரிப்பு நீங்க சித்த மருத்துவம் || ஸ்கின் அலர்ஜி மருத்துவம்

அலர்ஜி அரிப்பு நீங்க சித்த மருத்துவம்

அலர்ஜி அரிப்பு நீங்க சித்த மருத்துவம்:- நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுமே நம் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு தான் இருக்கிறது. உடல் உறுப்புகளை பாதுகாக்கும் முக்கிய பணிகளை தோல் செய்கிறது. அதுமட்டும் இல்லாமல் உடலின் வெப்ப நிலையையும் வியர்வை மூலமாக வெளியேற்றுகிறது.

இப்படி நமது உடலை பாதுகாக்க பெரும் உதவியாக இருக்கும் தோலிலும் நிறைய பிரச்சனைகள் வருவது உண்டு. அதில் முக்கியமான ஒன்றுதான் அலர்ஜி, தோல் அரிப்பு, தோல் வெடிப்பு, தோல் சிவத்தல், படர்தாமரை போன்ற ஏராளமான பிரச்சனைகள் நம் தோலில் ஏற்படுகிறது.

ஸ்கின் அலர்ஜி எதனால் வருகிறது:

அலர்ஜி அரிப்பு நீங்க சித்த மருத்துவம்:-  இதற்கு காரணம் பல லட்சக்கணக்கான நுண்கிருமிகள் நம் தோலில் உயிர் வாழ்கின்றன. இப்படி நமது தோள்களில் இருக்கும் இந்த கிருமிகள் கொஞ்சம் கொஞ்சமாக இரத்தத்தில் கலந்து விடுவதால் தோலில் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

அவற்றை எவ்வாறு அழிப்பது இந்த தோல் அரிப்பு அலர்ஜியிலிருந்து எப்படி இயற்கை மருத்துவ முறையில் நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

இந்த தோளில் வாழும் கிருமிகள் கொஞ்சம் கொஞ்சமாக மெலனின் மற்றும் ரோமத்திற்கு நிறத்தை தரும் நிறமிகளை அழித்து கொஞ்சம் கொஞ்சமாக நுண்ணிய ரத்தக் குழாய்களின் மூலமாக ரத்தத்தில் கலந்து விடுகிறது.

இரத்தத்தில் அலர்ஜி அரிப்பு அறிகுறிகள்:

இதனால், இந்த கிருமிகள் மூச்சு பாதையில் பல இடங்களில் தொல்லைகளை ஏற்படுத்துகிறது. இதனால் தோல் பாதிப்படைய தொடங்குகிறது.

இதன் காரணமாக நம் தோள்களில் சொறி சிரங்கு, கரப்பான், முகப்பரு, படை, தோல் வறட்சி, தோல் அரிப்பு, தோல் தடிப்பு, பொடுகு, தொடை இடுக்கு மற்றும் அக்குள், கழுத்து பகுதிகளில் மிகுந்த அரிப்பு போன்ற பல பிரச்சனைகள் உண்டாகிறது.

தோல் அரிப்பு மருத்துவம் || தோல் அரிப்பு சித்த மருத்துவம்:

1) அருகம்புல் & மஞ்சள்:

அலர்ஜி அரிப்பு நீங்க சித்த மருத்துவம்:-  ஒரு கிழங்கு துண்டு மஞ்சள் மற்றும் அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு எடுத்து இவை இரண்டையும் நன்றாக மை போல் அறைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு தோளில் பாதிக்கப்பட்ட இடங்களில் இதை பூசி ஒரு 30 அல்லது 40 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும்.

இது போன்று வாரத்தில் 4 அல்லது 5 நாட்கள் குளித்து வந்தால் தோல் நோய் குணமடையும்.

2) சதுரகள்ளி:

அலர்ஜி அரிப்பு நீங்க சித்த மருத்துவம்:-  தோல் நோய் தீவிரமடையும் நிலையில் கடுமையான காரத் தன்மை உள்ள மருந்துகளை பயன்படுத்தினால் மட்டுமே சரியாக வாய்ப்புகள் அதிகம். அதுபோன்று இயற்கையில் கிடைக்கக்கூடிய காரத்தன்மை அதிகம் கொண்ட ஒரு அற்புதமான மூலிகைச் சரி தான் சதுரகள்ளி.

இதை நாம் எங்கும் தேடி அலைய தேவையில்லை சாலை ஓரங்களில் அதிக அளவில் இது காணப்படும். இது ஒரு கள்ளி வகையை சார்ந்த மூலிகைச் செடி. இது சித்த மருத்துவத்தில் அதிகளவு பயன்படுத்தப்படும் ஒரு மூலிகையாக செயல்படுகிறது.

இந்த சதுரகல்லி சாறை எடுத்து தேங்காய் என்னை உடன் காய்ச்சி பலமாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் அதன் பிறகு தோல்களில் காணப்படும் சொறி, சிரங்கு ,சரும நோய்கள் தோல் தடுப்பு போன்ற இடங்களில் இதனை தடவி வர வேண்டும்.

இதுபோன்று நம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் மிளகை சதுரங்கள்ளி சாற்றில் நன்றாக ஊற வைத்து வெயிலில் நன்கு உலர்த்தி நல்லெண்ணெயில் கலந்து 10-நாட்கள் கழித்து அந்த எண்ணையை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு பிரச்சனைகள் சரியாகும்.

3) நன்னாரி வேர்:

நாட்டு மருந்து கடைகளில் இந்த நன்னாரி வேர் அதிகளவில் விற்கப்படுகிறது. ஒரு 25-கிராம் அல்லது 30-கிராம் நன்னாரி வேரை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து நன்றாக காய்ச்ச வேண்டும்.

இது நன்றாக கொதித்து ஓரளவு சுண்டிய பிறகு இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். காலையில் 50-மில்லி, மாலை 50-மில்லி என்று தினசரி குடித்து வந்தால் தோல் நோய் மிக மிக விரைவில் குணமடையும்.

4) வேப்பிலை & சின்ன வெங்காயம்:

அலர்ஜி அரிப்பு நீங்க சித்த மருத்துவம்:-  சின்ன வெங்காயம் ஒரு மூன்று மற்றும் ஒரு கொத்து வேப்பிலை இவை இரண்டையும் நன்றாக அரைத்து உடல் முழுவதும் பூசிக்கொள்ள வேண்டும். ஒரு 45-நிமிடம் கழித்து தண்ணீரில் குளித்து வர வேண்டும். இப்படி தொடர்ந்து தினமும் செய்து வந்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் விரைவில் குணமாகும்.

அலர்ஜி உணவகங்கள் || தோல் நோய் & அலர்ஜி உள்ளவர்கள் சாப்பிட கூடாத உணவுகள்:

1) மீன்கள் & நண்டுகள் :

• தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் மீன்கள் சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. அதிலும் கடல் மீனை முற்றிலும் தவிர்ப்பது மிக மிக நல்லது.

• மிக முக்கியமாக கருவாட்டை தவிர்ப்பது இதைவிட நல்லது. அதேபோன்று நண்டையும் தோல் பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.

2) கத்தரிக்காய்:

• நம்மில் அதிக பேர் கத்தரிக்காயை விரும்பி சாப்பிடுவார்கள். இதனால், தோளில் அரிப்பு ஏற்படுகிறது என்று கூறுகின்றனர். இதற்கு காரணம் கத்தரிக்காயில் அதிக அளவு புரதம் மற்றும் செரின் ஹிஸ்டைடின் இருப்பதால் சிலருக்கு இதை உடலில் சேர்ப்பதன் மூலம் உடல் ஏற்றுக்கொள்ளாமல் அலர்ஜி ஏற்படுகிறது.

• இதிலும், குறிப்பாக தோல் நோய் உள்ளவர்கள் கத்திரிக்காயை கொஞ்சம் கொஞ்சமாக உணவில் இருந்து தவிர்ப்பது அரிப்பிலிருந்து விடுபட ஒரு எளிய வழியாகும்.

3) தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் கிழங்கு வகைகளில் கருணைக்கிழங்கு, காரா கருணை போன்ற கிழங்கு வகைகளை சாப்பிடாமல் தவிப்பது நல்லது.

4) சுண்டைக்காய், மணத்தக்காளி வற்றல் போன்றவை சிலருக்கு சேராமல் அரிப்பை ஏற்படுத்த காரணமாக இருக்கும். இதனால், இதையும் உணவில் தவிர்ப்பது அவசியம்.

5) கீரை வகைகளில் அகத்தி கீரை மட்டும் அரிப்பு ஏற்படுத்த காரணமாக இருப்பதால் அதை மட்டும் தவிர்ப்பது நல்லது.

6) சரும நோய் உள்ளவர்கள் அவரைக்காய் மற்றும் பாகற்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

7) கோழி இறைச்சி மற்றும் முட்டை போன்றவற்றை தவிர்ப்பது மிக மிக நல்லது.

8) தக்காளி பழத்தை அதிகளவு உணவில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

9) மாங்காய், புளி கரைசல் போன்ற புளிப்பு உணவுகளை சாப்பிடுவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ள வேண்டும்.

10) எண்ணெயில் வறுத்த மற்றும் பொறித்த உணவுகளை முற்றிலும் அறவே தவிர்ப்பது நல்லது.

11) பழ வகையில் கொய்யா பழத்தை தவிர மற்ற அனைத்து பழங்களையும் சாப்பிடலாம்.

எனவே, தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் இதில் கூறிய உணவு வகைகளை தவிர்த்து, மேற்கூறிய மருந்துகளை சரியான முறையில் பயன்படுத்தி வந்தால் தோல் நோயிலிருந்து முற்றிலுமாக நாம் குணமடையலாம்.

மருத்துவ குறிப்பு:

தோல் அரிப்புக்கு என்ன செய்வது?

நமக்கு தோளில் அதிக அளவு அரிப்பு ஏற்படும் போது துளசி இலையை நன்றாக மை போல் அரைத்து அந்த இடத்தில் பூசி வந்தால் எரிச்சல் குறையும்.

அரிப்பினால் ஏற்படும் சிறுசிறு புண்கள் விரைவில் ஆற கீழாநெல்லி இலைகளை நன்றாக அரைத்து உடல் முழுவதும் பூசி ஒரு 30-நிமிடம் கழித்து குளித்து வந்தால் மிக விரைவில் புண்கள் ஆறிவிடும்.

உடலில் அரிப்பு ஏற்படுவது ஏன்?

நாம் சாப்பிடும் சிறு சிறு உணவுகளில் நம் உடல் எத்துக்கொள்ளாத காரணத்தினால் சில சமயங்களில் அரிப்பு உண்டாகும். அதேபோன்று தேவையற்ற கிருமிகள் நம் இரத்தத்தில் கலப்பதால் கூட அரிப்பு ஏற்படுகிறது.

படர்தாமரை சரி செய்வது எப்படி?

படர்தாமரை தொற்று இருக்கும் நபர்கள் கட்டாயமாக இரண்டு வேலையும் நன்றாக குளித்து நன்றாக துவைத்த ஆடைகளை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். அதுமட்டுமில்லாமல் ஜீன்ஸ் போன்ற இருக்கமான உடைகளை அணியாமல் தளர்வான காட்டன் துணிகளை பயன்படுத்த வேண்டும்.

அலர்ஜி அரிப்பு நீங்க சோப்பு:

“மெடிசாலிக் சோப்” அலர்ஜியை கட்டுப்படுத்த மருத்துவரின் பரிந்துரைப்படி பயன்படுத்தப்படுகிறது.

உடல் அரிப்பு நீங்க ஆங்கில மருந்து:

தோளில் அரிப்பு, தோல் தடிப்பு மற்றும் இதர சரும பிரச்சனைகளுக்கு “ஜெனாக்டிவ் மாத்திரை( Genactive Tablet )” மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த மருந்து ஒரு ஒவ்வாமை எதிர்ப்பு மருந்தாகும். இது உடலில் ஒவ்வாமை காரணமாக இருக்கக்கூடிய “ஹிஸ்டமைன்” என்று அழைக்கப்படும் ஒரு இரசாயன பொருளை தடுக்கிறது.

Read Also:- தோல் அரிப்பு இயற்கை மருத்துவம் 

Leave a Comment